சிதிலமடைந்து வரும் கோவை வின்சென்ட் சாலை குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள்

இந்த குடியிருப்புகள் முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டிடங்கள், சிதிலமடைந்தும் , கட்டிடங்களில் விரிசல் ஏறபட்டும் காணப்படுகின்றது

  • Share this:
கோவை வின்சென்ட் வீதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பழுதடைந்தும் , சுவர்கள் விரிசல் ஏற்பட்டும் இருக்கும்  நிலையில் கட்டிடங்களை புனரமைத்து தர வேண்டும் என குடியிருப்புவாசிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை உக்கடம் வின்சென்ட் சாலையில் இருந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கடந்த 2007 ல் இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த குடியிருப்புகள் அனைத்தும் இடிக்கப்பட்டு புதியதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு் 2013 ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.கடந்த 9 ஆண்டுகளாக பொது மக்கள் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த குடியிருப்புகள் முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டிடங்கள், சிதிலமடைந்தும் , கட்டிடங்களில் விரிசல் ஏறபட்டும் காணப்படுகின்றது.17 பிளாக்குகளில் 352 வீடுகள் இந்த குடியிருப்பில் இருக்கும் நிலையில் இவற்றில் பெரும்பாலான கட்டிட்டங்களின் பின்புற பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கட்டிடங்களின் மாடிகளில் செடி,கொடிகள்  வளர்ந்தும் காட்சியளிக்கும் நிலையில் இவற்றை சரி செய்து கொடுக்க வேண்டும் என குடிசைமாற்று அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை என குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Also Read : கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.182 கோடியை உடனடியாக வழங்க உத்தரவு: அமைச்சர் பன்னீர்செல்வம்  

மேலும் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகம் முழுவதும் முறையான பராமரிப்பு இல்லாமல் நீர் தேங்கி கொசு தொல்லை ஏற்படுவதுடன், சுகாதாரமற்ற நிலை இருப்பதாகவும், அரசிடம் முறையிட்டு எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் குடியிருப்புவாசிகள் ஒருங்கிணைத்து தங்களால் ஆன மராமரத்து பணிகளை செய்து வருவதாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Also Read : அடுத்த 4 நாட்களுக்கு இங்கெல்லாம் இடியுடன் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால்  வீடுகள் சேதமடைந்து இருக்கும் நிலையில் , 2007ல் நடந்த அசம்பாவிதம் போல் மீண்டும் ஒரு சம்பவம்  நடைபெறும் முன்னரே உரிய சீரமைப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனர். இதே போல நகரின் பல்வேறு பகுதிகளில் உரிய பராமரிப்பு இல்லாமல் இருக்கும் வீட்டுவசதி வாரிய, குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை சீரமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: