Home /News /tamil-nadu /

கோவையில் குடோனில் 13 பெரிய பாக்ஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல்

கோவையில் குடோனில் 13 பெரிய பாக்ஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹாட் பாக்ஸ்கள் பறிமுதல்

ஹாட் பாக்ஸ் பறிமுதல்

ஹாட் பாக்ஸ் பறிமுதல்

Coimbatore : கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக குடோனில் மறைத்து வைக்கப்பட்டு  இருந்த ஹாட் பாக்ஸ் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சி நஞ்சுண்டாபுரம் பகுதி 62 வார்டில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள குடோனில் பரிசு பொருட்களை வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அங்கு திரண்ட  அதிமுகவினர் இது குறித்து காவல்துறையினருக்கும், பறக்கும் படை அதிகாரகளிக்கும்  தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்த நிலையில், கதவை திறக்க வேண்டுமென அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால்  தோட்டத்தின் உரிமையாளர் நீண்ட நேரமாக வராத காரணத்தினால் குடோனின் கதவு உடைக்கப்பட்டது. குடோனுக்குள் 13 பெரிய பெட்டிகளில் நூற்றுக்கணக்கா ஹாட் பாக்ஸ் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது  தெரியவந்தது. இதனையடுத்து ஹாட் பாக்ஸ்கிற்குள் பணம் வைத்து இருக்க கூடும் எனவும் எனவே அவற்றை  திறந்து காட்ட வேண்டும் என அதிமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து அதில் இருந்த ஹாட்பாக்ஸ்  திறந்து பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் பணம் எதுவும் இல்லை. இதனையடுத்து அதிகாரிகள் பரிசுபொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் பின்னரே அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக திமுகவினர் ஹாட்பாக்ஸ்களை பதுக்கி வைத்திருப்பதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஹாட்பாக்ஸ்  பறிமுதல்  செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Must Read : கோவையில் திமுக நிர்வாகிகள் தங்கியிருத்த வீடு, கார் மீது தாக்குதல் : அதிமுக பகுதி செயலாளர் உட்பட 27 பேர் மீது வழக்கு பதிவு

இதே போல கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் சிலர் ஹாட் பாக்ஸ் கொடுப்பதாக தகவல் கிடைத்து சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் அங்கு சென்றனர். அப்போது அவர்கள் அந்த ஹாட்பாக்ஸ்களை போட்டு விட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகின்றது.

Read More : ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்ததால் ஸ்டாலினுக்கு அடிவயிறு கலங்குகிறது - ஆர்.பி.உதயகுமார்

கீழே கிடந்த ஹாட்பாக்ஸ்களை எடுத்து பார்த்தபோது அதில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. இதனையடுத்து இது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கீழே கிடந்த  ஹாட்பாக்ஸ்களை  பறிமுதல் செய்தனர்.
Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Local Body Election 2022

அடுத்த செய்தி