கோவை வேளாண்மை பல்கலைகழக வகுப்பறையில் யாகபூஜை: துறைத் தலைவர் கலந்துகொண்டதால் சர்ச்சை

கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம்

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் உள்ள விவசாய பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு துறையில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை நடத்தியதுடன் வகுப்பறையில் யாகமும் நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாய பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு துறைக்கு புதிய ஆய்வகக் கட்டடம், கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி வகுப்பறையில் யாக பூசைகளும் நடத்தப்பட்டது. இதில் பொறியியல் கல்லூரி மற்றும் ஆய்வு துறை தலைவர் முனைவர் ஸ்ரீதர் கழுத்தில் மாலையுடன் யாக பூஜையில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அறிவியலை போதிக்க வேண்டிய பல்கலைக்கழக வளாகத்தில் மூடநம்பிக்கையை போதிக்கும் விதமாக வகுப்பறையில் யாக பூஜை நடத்துவதும் அதில் துறைத் தலைவரே கலந்து கொண்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் குமாரிடம் கேட்டபோது, கட்டுமான பணியினை ஒப்பந்தம் எடுத்து இருப்பவர்கள் பூஜை நடத்தியதாகவும் அதில் சிலர் கலந்து கொண்டது கவனத்திற்கு வந்தாகவும் இதுபோன்ற நிகழ்வுகளில் பல்கலைகழக ஊழியர்கள் யாரும் கலந்து கொள்ளகூடாது என அறுவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.
Published by:Karthick S
First published: