Home /News /tamil-nadu /

கொலை வழக்கில் கைதான இந்து முன்னணி நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

கொலை வழக்கில் கைதான இந்து முன்னணி நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்

இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்

Coimbatore News | கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள நாகம்மாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சரவண சுந்தரம். இவர் அன்னூரில் இந்து முன்னணி அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளரான ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
கோவை மாவட்டம் அன்னூரில் சரவணசுந்தரம் என்ற இளைஞர் கொலை  வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள நாகம்மாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சரவண சுந்தரம். இவர் அன்னூரில் இந்து முன்னணி அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளரான ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதில் இருந்து விலகி தனியாக பைனான்ஸ் நிறுவனம் துவக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், சரவணசுந்தரத்தை தனது ஆட்கள் மூலம் கடந்த ஜனவரி 29 ம்தேநி கொலை செய்தார். இது தொடர்பாக  இந்து முன்னணியை சேர்ந்த ராஜேந்திரன் உட்பட 3 பேரை அன்னூர் போலீசார் கைது செய்தனர்.

Also read... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்நிலையில் இந்து முன்னணி ராஜேந்திரன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பரிந்துரையின் இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மீது குண்டர் சட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் சமீரன் நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார். இதனையடுத்து சிறையில் உள்ள இந்து முன்னணி ராஜேந்திரனிடம் குண்டர் சட்டத்திற்கான உத்திரவு நகல் வழங்கப்பட்டது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Coimbatore, Crime News

அடுத்த செய்தி