ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

CoronaVirus : கோவையில் படிப்படியாகக் குறையும் கொரோனா தொற்று

CoronaVirus : கோவையில் படிப்படியாகக் குறையும் கொரோனா தொற்று

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கோவையில் கொரொனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் தொற்று பரவல் படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. அதே வேளையில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் தொற்று குறைந்தது. அதே வேளையில் கோவை உட்பட ஒரு சில மாவட்டங்களில் தொற்று வேகமாக பரவி வந்தது.

இந்நிலையில் கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு, சென்னையில் மேற்கொள்ளப்பட்டதை போல கோவையிலும் தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளபட்டது. ஒரு வார கால இடைவெளியில் அதற்கான பலன்கள் தென்பட துவங்கியுள்ளன. கடந்த சில தினங்களாக கொரொனா தொற்றின் வேகம் படிபடியாக குறைய துவங்கி இருக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக கடந்த மே 27-ம் தேதி 4,734 பேருக்கு ஓரே நாளில் கொரொனா தொற்று இருந்தது. அது மே 28-ம் தேதி 3,937 ஆக குறைந்தது. மே 29ம் தேதி - 3,692 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், அது மே 30ம் தேதி - 3,537 ஆக குறைந்தது. 31ம் தேதி - 3,488 ஆகவும், ஜூன் 1ஆம் தேதி 3,332 ஆகவும், ஜூன் 2ஆம் தேதி 3,061 படிபடியாக மெல்ல குறைய துவங்கியுள்ளது.

இதே போல மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைய துவங்கி இருக்கின்றது. நேற்று முன் தினம் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 40,577 ஆக இருந்த நிலையில், நேற்று 39,112 ஆக சற்று குறைந்துள்ளது. அதே வேளையில் உயிரிழப்புகள் என்பது தொடர்ந்து அதிகரித்த படி இருக்கின்றன.

நேற்று ஓரே நாளில் 38 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கோவை மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,345 ஆக உயர்ந்துள்ளது. தினமும் சராசரியாக 20 முதல் 30 பேர் வரை உயிரிழந்து வருவது குறிப்பிடதக்கது. தொற்று எண்ணிக்கையை குறைப்பதை போல, உயிரிழப்புகளுக்கான காரணங்களை அறிந்து அவற்றையும் குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 25,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 483 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 35,000-க்கும் கூடுதலாக பதிவான நிலையில், தற்போது 25,000-வரையில் குறைந்திருக்கின்றது.

Must Read : தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப் பெயரில் ஜாதிச் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 7ஆம் தேதியுடன் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், நோய் தொற்று குறைந்துள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

First published:

Tags: Coimbatore, CoronaVirus, Covid-19