சமூக செயல்பாட்டாளர்களை பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்ப்பதற்கு, நாட்டில் எமர்ஜென்ஸியை மத்திய அரசு அறிவித்து விடலாம் எனவும், உளவுபார்க்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து சட்ட நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெகாசஸ் ஸ்பைவேர் எனும் செயலி மூலம் பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் கண்காணிக்கப்பட்ட தகவல் வெளியானது. அந்த பட்டியலில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் மொபைல் தரவுகள் வேவு பார்க்கப்பட்டதும் தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, பத்திரிகையாளர்கள் முக்கிய பிரபலங்கள் உட்பட 50 பேர்களின் செல்போன் தரவுகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும், மோடி அரசு பெகாசஸ் என்ற செயலியின் மூலம் உளவு பார்த்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
இந்த பெகாசஸ் ஸ்பைவேர் செயலி மூலம், மொபைல், கம்ப்யூட்டர் போன்றவை உளவு பார்க்கபட்டுள்ளது எனவும், இதன் மூலம் மொபைல், கம்ப்யூட்டர்களில் உள்ள இமெயிலில் நுழைந்து பார்க்கவும், அதை செயல்படுத்தவும் முடியும் எனவும், புகைப்படங்கள், பேசுவது போன்ற அனைத்தையும் இந்த செயலி மூலம் கண்காணிக்கவும், எடுக்கவும் முடியும் என தெரிவித்தார்.
மத்திய அரசு சட்ட விரோதமான முறையில் உளவு பார்த்து இருப்பது தெரியவந்துள்ளது எனகூறிய அவர், பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உளவு பார்த்து பொய்யான தகவல்களை பதிவு செய்து, ரோனா வில்சன் என்ற சமூக செயற்பட்டாளர் உட்பட பலர் மீது பொய்வழக்கு போடப்பட்டுள்ளது எனவும் ,பீமா கோரேகான் வழக்குகளில் பலர் சிறையில் இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
செல்பேசியை உளவு பார்க்க அவசியம் என்ன? மக்களுக்காக போராடுபவர்கள் மீது இந்த உளவு பார்க்கும் வேலையை மத்திய அரசு செய்கின்றது என கூறிய அவர், இதை அனுமதித்து விட்டால் யார் மீது வேண்டுமானாலும் இந்த செயலியை வைத்து தவறான தகவல்களை பதிவு செய்து சிறையில் அடைத்துவிட முடியும் என தெரிவித்தார்.
நேர்மையற்ற செயல்களை மத்திய அரசு செய்து வருகின்றது என கூறிய அவர், இந்த மென்பொருள் இந்திய அரசுக்கு மட்டுமே இஸ்ரேல் கொடுத்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார். 7 ஆண்டுகளாக பிரதமர் ஊடகத்தை சந்திக்க வில்லை, ஆனால் இப்போது ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகின்றது என கூறிய அவர், பத்திரிகை சுதந்திரத்தை, பாதுகாப்பை, மோசமான இடத்தில் வைத்திருக்கும் நாடுகள் இந்த செயலியை பயன்படுத்துகின்றது எனவும் இந்திய அரசும் இந்த செயலியை பயன்படுத்துகின்றது எனவும், பத்திரிகையாளர்களை முடக்கும் மோசமான நாடுகள் மட்டுமே இந்த செயலியை பயன்படுத்துகின்றது என தெரிவித்தார்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை 6 மாதத்திற்குள் ஊடகங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என சொல்கின்றார், ஆனால் இதை பயன்படுத்தி 6 மாதங்களுக்கு முன்பாகவே ஊடகங்களை அவர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள் எனவும் வெளிப்படையாகவே இதை அவர்கள் செய்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.
இதை எமர்ஜென்ஸி என அறிவித்து விடலாம் , எமர்ஜென்ஸி காலத்தில் இருந்த நடைமுறைகள் போல இப்போது இருக்கின்றது எனவும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central govt, Thirumurugan Gandhi