• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளை கண்டுபிடிப்பதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது: வானதி சீனிவாசன்

அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளை கண்டுபிடிப்பதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது: வானதி சீனிவாசன்

அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளை கண்டுபிடிப்பதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது: வானதி சீனிவாசன்

அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளை கண்டுபிடிப்பதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது: வானதி சீனிவாசன்

அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளை கண்டுபிடிப்பதில் மட்டுமே அரசு கவனம் போய் விடக்கூடாது, புதிய திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்றதாக இருப்பதாக வந்திருக்கும் புகார்கள் குறித்து தமிழக அரசு விசாரிக்கட்டும் எனவும், அதே வேளையில் கடந்த அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளை கண்டுபிடிப்பதில் மட்டுமே இந்த அரசின் கவனம் போய் விடக்கூடாது, மக்கள் வழங்கிய நேரம், திறனை இதற்காக மட்டும் செலவழிக்காமல், புதிய திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் என பா.ஜ.க மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் மக்கள் சேவை மையம் சார்பில் மோடி மகள் திட்டம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்களை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் இன்று வழங்கினார். காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் ஏராளமான மாற்று திறனாளிகள் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகள், குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Also read: நகைக்கடன் தவனை முடிவதற்கு முன்பே, நகைகளை ஏலம் விட்டு மோசடி: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, 10 வயதுக்கு கீழாக இருக்கும் குழந்தைகளுக்கும் அடையாள அட்டை வழங்கினால் அவர்களும் உதவிகள் பெற வசதியாக இருக்கும். தமிழக அரசு இதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த நிதி அறிக்கையில் மாற்று திறனாளிகளுடன் இன்னொருவரும் சேர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அனுமதி நகர பேருந்துகளில் மட்டும் வழங்கப்படுகின்றது. தொலைதூர பேருந்துகளிலும் இந்த அனுமதி  வழங்கப்பட வேண்டும்.

அதிமுக ஆட்சியில் தரமற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டதாக வந்த புகார்கள் குறித்து தமிழக அரசு விசாரிக்கட்டும், அதிமுக ஆட்சியில்  செய்யப்பட்ட எல்லா காரியத்தையும் விசாரிப்போம் என்றால், மக்கள் பணியாற்ற கொடுத்து இருக்கும் 5 ஆண்டு காலத்தின் நேரம், திறனை இதற்கு செலவழிப்பதை விட, புதிய ஆக்கப்பூர்வமான திட்டங்களில் கவனம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

அதிமுக ஆட்சியில் செய்த தவறுகளை கண்டுபிடிப்பதில் மட்டுமே இந்த  கவனம் போய் விடக்கூடாது என்பது என் எண்ணம், புகார் இருக்கும் இடங்களை அரசு ஆய்வு செய்யட்டும்.

திமுக ஆட்சியின் 100 நாள் முடிந்து இருக்கின்றது, இது ஆரம்ப காலகட்டம் என கூறிய  அவர், திமுக ஆட்சி குறித்து  சொல்லபெரிதாக எதுவுமில்லை.

சவாலான கொரொனா சூழ்நிலையில் இந்த ஆட்சியாளர்கள் பணிபுரிகின்றனர், ஆனாலும் மக்களுக்கு  கொடுத்திருக்க கூடிய வாக்குறுதிகள் அவர்கள் முன்பாக இருக்கின்றது. தமிழக அரசுக்கு வரி வருவாய்  பங்களிப்பை விட, மத்திய அரசின் நேரடி திட்டங்கள், மானியம் வாயிலாக 3 மடங்கு திட்டங்கள் நிதி வருவதை நிதியமைச்சர் ஒப்புக்கொள்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் அதை மாநில அரசு மூலம் செய்யாமல் ஏன் மத்திய அரசு செய்கின்றது என கேள்வி கேட்கின்றார், மத்திய அரசு மக்களுக்காகதான் இந்த திட்டங்களை கொடுக்கின்றது. அதை பாராட்ட நிதி அமைச்சருக்கு மனமில்லை. மத்திய அரசு நேரடியாக செய்யும் திட்டங்களை  மாநில அரசிடம்தான் கொடுக்க வேண்டும், இது எங்கள் உரிமை என்று அவர் சொல்வார் என்றால், யாருக்காக இந்த திட்டங்கள் கொடுக்கப்படுகின்றது என்பதை நிதியமைச்சர்  பார்த்து சொல்லட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: