Home /News /tamil-nadu /

கல்வி தனித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

கல்வி தனித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

RN Ravi : கல்வி தனித்து இருக்க வேண்டியது இல்லை, அதே வேளையில் அது தேசிய அளவில் நன்மை கொடுப்பதாக இருக்க வேண்டும் , அடுத்த 25 ஆண்டுகளை இலக்காக வைத்து துணைவேந்தர்கள் திட்டமிட வேண்டும் எனவும் கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் நடைபெற்ற தென்மண்டல துணைவேந்தர்கள் கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இந்திய பல்கலைக்கழக கூட்டமைப்பின் சார்பில், தென்மண்டல துணைவேந்தர் கூட்டம் இன்று துவங்கியது. இதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், இங்கே வந்துள்ள துணை வேந்தர்கள் கல்வியில் தேர்ந்தவர்கள் என தெரிவித்த அவர், கல்வி தனித்து இருக்க வேண்டியது இல்லை எனவும் அதே வேளையில் அது தேசிய அளவில் நன்மை கொடுப்பதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதனால் நாம்  உயர்கல்வியை மாற்றி அமைக்க வேண்டும் எனவும், இந்திய நாட்டிற்கு நமது பார்வை என்ன என்பதை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இளைஞர்கள் தான் நமது எதிர்காலம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனக்கூறிய அவர், சுமார் 65 ஆண்டுகளாக தான் இந்தியா என அழைக்கிறோம். இந்தியாவை ஆள வந்த ஆங்கிலேயர்களுக்கு நாம் வெறும் நிலமாகத்தான் இருந்தோம் என்றார். மேலும், அரசுகள் 5 ஆண்டுகள் தான் இருக்கும், ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் நிதி ஒதுக்குகிறார்கள் அது அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடருகிறது எனவும், அதன் பின்னர் இலவசங்களை நோக்கி அரசுகள் நகர்ந்து விடுகிறது எனவும் தெரிவித்தார்.

அரசுகள் மாறினாலும் மக்களின் பிரச்சினைகள், சமூக பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன என்று கூறிய ஆளுநர், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்வி கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுவதால் முழு பலனும் கிடைப்பதில்லை எனவும், இதனால் மாநிலங்களுக்கு இடையே சமநிலை இருப்பதில்லை எனவும் தெரிவித்தார். 2014ல் பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பின் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பார்வை மாறியிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

சங்ககால படைப்புகளிலேயே பாரதம் என்ற வார்த்தை இருந்துள்ளது எனவும், ‘செப்புமொழி 18 உடையாள் சிந்தனை ஒன்றுடையாள்’ என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் மோடியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலி்ட்ட அவர், 2014ல் 400 புதிய நிறுவனங்கள் மட்டுமே இருந்தது, ஆனால் 2022ல் 10 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக உயர்ந்துள்ளது எனவும் கூறினார்.

Read More : 5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக பெற்றுள்ளது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: அண்ணாமலை

தற்போது 2047ம் ஆண்டு எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும் எனக்கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 2047ல்  நம் இலக்கு உலகை வழிநடத்தும் இடத்தில் இந்தியா இருக்க வேண்டும் எனவும் இதை வைத்து  துணைவேந்தர்கள் யோசித்து , வேலைக்காக மட்டும் இல்லாமல், அனைவருக்கும் பயன்படும் வகையில் திட்டமிடல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.



Must Read : ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்காது, அதற்கு வாய்ப்பில்லை: சுப்பிரமணியன் சாமி

கடந்த 20 ஆண்டுகளில் 30 ஆயிரம் முனைவர்கள் ஆய்வு கட்டுரைகள் தாக்கல் செய்து இருக்கின்றனர் எனக்கூறிய அவர், மாணவர்களின் ஆராய்ச்சி மக்களுக்கும், நாட்டுக்கும் பயனளிப்பதாக இருக்க வேண்டும்  எனவும் சில தலைவர்கள் குறித்து ஆய்வு கட்டுரை தயாரிப்பதால் யாருக்கும் பயனிருக்க போவதில்லை எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
Published by:Suresh V
First published:

Tags: Governor, RN Ravi, University vise chancellor

அடுத்த செய்தி