ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதல்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

அரசு பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதல்... இணையத்தில் வைரலாகும் வீடியோ

அரசு  பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதல்

அரசு  பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதல்

School Students Viral Video | மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்ட  சம்பவத்தை சாலையில் காரில் சென்ற நபர் ஒருவர் செல்போனில்  பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவை  ஒண்டிபுதூரில் அரசு  பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து சாலையில் மோதிக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் இரு குழுக்களாக பிரிந்து மோதிக்கொண்டனர். மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

பேருந்து நிறுத்ததில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் நின்று கொண்டு இருந்த போது, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  மாணவர்கள் மோதிக் கொண்டதால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்து  ஒதுங்கி நின்றனர். மாணவிகள் மற்றும் பொதுமக்கள்  முன்பாக அரசு பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்நிலையில் மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்ட  சாலையில்  காரில் சென்ற நபர் ஒருவர் செல்போனில்  பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மோதல் நடந்த அன்றே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவர்களை எச்சரித்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது மாணவர்கள் மோதிக்கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் இவ்விதம் தாக்குதலில் ஈடுபடுவது தற்போதைய காலங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது. முன்னதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். அதில், அரசு பள்ளி மாணவர்களே நமது பெற்றோர் நம்மை ஏன் அரசுப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.

அவர்களிடத்தில் பெரிய வருமானம் கிடையாது. அதாவது அவர்களிடத்தில் அதிகமான சொத்துகள் கிடையாது. வருமானமில்லை. ஆனால் நீங்கள் உங்களுக்கு சொத்துகள் இல்லை என்று நினைத்து விடாதீர்கள். உங்களின் பெற்றோர்களுக்கு தான் சொத்துகள் கிடையாது. ஆனால் மாணவர்களாகிய உங்களுக்கு நிறைய சொத்துகள் உள்ளது. நிறைய ஆதாரங்கள் உள்ளது. அது என்ன ஆதாரம், என்ன சொத்து என்று பார்த்தீர்கள் என்றால், அரசு பள்ளி இருக்கிறது அல்லவா, அது தான் உங்கள் சொத்து என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

First published:

Tags: Viral Video