• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசுப்பேருந்தில் அருவியாய் கொட்டிய மழைநீர் – குடைப்பிடித்து பயணித்த பொதுமக்கள்

அரசுப்பேருந்தில் அருவியாய் கொட்டிய மழைநீர் – குடைப்பிடித்து பயணித்த பொதுமக்கள்

அரசுப்பேருந்தில் மழைநீர்

அரசுப்பேருந்தில் மழைநீர்

வால்பாறை கொண்டை ஊசி வளைவுகள் தென்படும் அருவிகள் போல் அரசுப்பேருந்துக்குள் ஆங்காங்கே மழைநீர் அருவியாய் கொட்டியது.

  • Share this:
    பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் பேருந்துக்குள் மழை நீர் ஒழுகுவதால் அரசு பேருந்தில் குடை பிடித்தபடி பயணம் செய்த பயணிகள்.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் கடந்த வாரம் முதல் இன்று வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்றும்  வால்பாறையில் மழைகொட்டித் தீர்ந்தது. வால்பாறையில் இருந்து  சேக்கல் முடி பகுதிக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு பேருந்தில் முழுவதுமாக மழை தண்ணீர் ஒழுகியது. வால்பாறை கொண்டை ஊசி வளைவுகள் தென்படும் அருவிகள் போல் பேருந்துக்குள் ஆங்காங்கே மழைநீர் அருவியாய் கொட்டியது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்துள்ளனர்.

    வால்பாறை பகுதியில் வருடத்தில் அதிக நாட்கள் அதிக அளவு மழை பெய்யும் நிலை உள்ளது. இதனால் இதுபோன்ற மழையில் ஒழுகும் பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை விட அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனார்.

    செய்தியாளர்: ம.சக்திவேல் (பொள்ளாச்சி)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: