Home /News /tamil-nadu /

பொள்ளாச்சியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. வீட்டின் அருகே வீசிச்சென்ற கொடூரம்

பொள்ளாச்சியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை.. வீட்டின் அருகே வீசிச்சென்ற கொடூரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மலை கிராமத்தில் புகுந்து சிறுமியை கடத்தி சென்ற மர்ம நபர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ள மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள்.

    பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாப்பள்ளி, பொள்ளாச்சி, உலந்தி மற்றும் உடுமலை, அமராவதி என மொத்தம் 6 வனச்சரகங்கள் உள்ளன.இந்த ஆறு வனச்சரகங்களிலும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த புத்தாண்டு அன்று ஒன்றாம் தேதி வால்பாறை பகுதி மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கூடமாட்டி மலைவாழ் மக்கள் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து அங்கு வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியை மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கடத்திச் சென்றுள்ளனர்.

    Also Read: ஆபாசப்பேச்சு.. வீடியோ.. சிறைப்பறவைகளாக ரவுடி பேபி சூர்யா - சிக்கா

    அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் இந்த கிராமத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 11 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.பகல் 2 மணிக்கு கடத்திச் செல்லப்பட்ட சிறுமி மயக்க நிலையில் இரவு 7 மணி அளவில் சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்து மற்றும் கண்களை கட்டியவாறு அதை மர்ம அதை மர்ம நபர்கள் சிறுமியின் வீட்டிற்கு அருகில் கொண்டு சென்று வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

    இதைக்கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோருக்கும் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
    பின்பு மலைவாழ் மக்கள் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும் பழங்குடியின தன்னார்வ அமைப்புகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலை வைத்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டுமெனவும் புகார் மனு அளித்தனர்.

    Also Read:  காதலிக்க மறுத்த பெண்ணின் பெயரில் போலி கணக்கை துவக்கி ஆபாச படங்கள் பதிவேற்றம்: இளைஞர் கைது

    மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  இந்த சம்பவத்தை அறிந்து கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பாலியல் வன்கொடுமையை  கண்டிப்பதுடன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என கண்டறிந்து அனைவரையும் கைது செய்வதுடன் அவர்கள் மீது துரித விசாரணை மேற்கொண்டு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டுமெனவும் தமிழக அரசையும் கோவை மாவட்ட காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக  வலியுறுத்தியுள்ளார்.

    கோவை மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பரமசிவம்   கூறியதாவது அடர்ந்த வனப்பகுதிக்குள் வெளியாட்கள் வரமுடியாத சூழ்நிலையில் உள்ள இந்த மலை கிராமத்தில் எப்படி மர்ம நபர்கள் உள்ளே புகுந்தார்கள் எனவும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை காவல்துறையினர் தற்போது வரை சந்தித்து எந்த விசாரணை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் காவல்துறையினர் மெத்தனமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களை சந்தித்து தங்களுக்கு சரியான நீதி வேண்டும் எனவும் மலை கிராமத்தில் புகுந்த மர்ம நபர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமெனவும் கோவை மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பரமசிவம் கூறியுள்ளார்.

    செய்தியாளர்: ம.சக்திவேல், (பொள்ளாச்சி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Pollachi, Sexual abuse, Sexual harassment

    அடுத்த செய்தி