• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விநாயகர் சதுர்த்தி: சர்ச்சை துண்டு பிரசுரம் - கல்லூரி தாளாளர் கைது!

விநாயகர் சதுர்த்தி: சர்ச்சை துண்டு பிரசுரம் - கல்லூரி தாளாளர் கைது!

விநாயகர் சதுர்த்தி: சர்ச்சை துண்டு பிரசுரம் - கல்லூரி தாளாளர் கைது

விநாயகர் சதுர்த்தி: சர்ச்சை துண்டு பிரசுரம் - கல்லூரி தாளாளர் கைது

விநாயகர் சதுர்த்தியன்று ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய பிரசுரத்தை விநியோகித்த கல்லூரி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
    கோவை தடாகம் சாலையில் உள்ள செயிண்ட் பால் பள்ளி, மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் டேவிட். இவர் விநாயகர் சதுர்த்தி அன்று ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என்பது போன்ற பிரசுரங்களை விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது.

    அந்த பிரசுரம் பள்ளி நிர்வாக லெட்டர் பேடில் அச்சிடப்பட்டிருந்தது. அதில் "கிறிஸ்துவ சகோதர சகோதரிகளே, மிஷனரிகளே மிஷனரி இயக்க தலைவர்களே கோவையில் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ஜெபயாத்திரை நடத்தியதன் விளைவாக கோவை மாவட்ட ஆட்சியர் அனுமதியில்லாமல் யாரும் விநாயகர் சிலையை வெளியில் வைக்க கூடாது.

    1 அல்லது 2 நாட்களில் சிலையை கரைத்து விட வேண்டும். போன்ற கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இந்த சட்டங்களினால் தற்போது விநாயகர் சதுர்த்தியன்று பிரச்சினை வராமல் உள்ளது. இதற்கு எல்லாம் ஜெபயாத்திரை தான் காரணம் என நம்புகிறோம்.

    Also read: வீடு புகுந்து இளம்பெண் கொடூரமாக கத்தியால் குத்தி கொலை... தேவையற்ற உறவால் நேர்ந்த சோகம்

    அதே போன்று இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் 10 தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் அன்றோ அல்லது அதற்கு முன்போ ஜெபயாத்திரை நடத்த விரும்புகிறேன். இந்த கொரோனா காலத்தில் இப்படிப்பட்ட ஜெபயாத்திரை மிகுந்த பலனளிக்கும் என்று நம்புகிறேன்"  என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து இந்து முன்னனி அமைப்பினர் நேற்று துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், டேவிட்டை கைது செய்ய வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் செயிண்ட் பால் கல்வி நிறுவன சேர்மேனான டேவிட் சாதி, மத, மொழி, இனம் தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டி விடுதல் (IPC 153(a)(1),  உள்நோக்கத்துடன் அவமதித்தல் (504), இரு மதங்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல் (ipc 505(2)) ஆகிய பிரிவுகளில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    செய்தியாளர் - சுரேஷ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: