• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகன் மோசடி வழக்கில் கைது

முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகன் மோசடி வழக்கில் கைது

கோவை தங்கத்தின்  மருமகன் அருண்பிரகாஷ்

கோவை தங்கத்தின்  மருமகன் அருண்பிரகாஷ்

பணத்திற்காக கொடுக்கப்பட்ட இரண்டு காசோலைகளும் பணமின்றி திரும்பி வந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கோவையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கோவை தங்கத்தின்  மருமகன் அருண்பிரகாஷ், தொழில் செய்வதாக கூறி 1.5 கோடி ரூபாய் பணம் வாங்கி ஏமாறி வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை சாய்பாபா காலனி  கணபதி லேஅவுட்டை  சேர்ந்தவர் அருண்பிரகாஷ். 41 வயதான  இவர், முன்னாள் எம்.எல்.ஏ., கோவை தங்கத்தின் மருமகன். கோவையில் ரியல் எஸ்டேட் நிறுவனம், ஹேட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை இவர்  நடத்தி வந்தார்.  இந்நிலையில், கோவை பீளமேடு சிட்ரா பகுதியை சேர்ந்த செங்குட்டுவன் என்பவருடைய மகள் சிந்துஜாவுடன் அருண்பிரகாஷிற்கு பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் சேர்ந்து தொழில் செய்யலாம் என்று  சிந்துஜாவிடம் அருண்பிரசாத் தெரிவித்த நிலையில், தந்தை செங்குட்டுவனிடம் இது குறித்து சிந்துஜா கூறியுள்ளார். தனது மகளுடன் சேர்ந்து தொழில் செய்வதாக கூறியதால் செங்குட்டுவன், அருண்பிரகாஷிற்கு 1.5 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால்  அவர் தொழில் எதுவும் தொடங்காமல் காலம் தாழ்த்திய நிலையில் இது குறித்து   செங்குட்டுவன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார்  அளித்தார்.

அந்த புகாரில் பணத்தை திரும்ப கேட்டபோது வால்பாறையில் தேயிலை எஸ்டேட் விற்று பணத்தை தருவதாக தெரிவித்தாகவும், ஆனால் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், பணத்திற்காக கொடுக்கப்பட்ட  இரண்டு காசோலைகளும் பணமின்றி திரும்பி வந்து விட்டதாகவும், பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அருண் பிரகாஷை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிபதி முன்னர், ஆஜர் படுத்தப்பட்டு அவிநாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே சிந்துஜா கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் செய்திருந்தார்.

அந்த புகாரில், கணவரை விட்டு பிரிந்து வசித்த தன்னை, அருண்பிரகாஷ் ஹோட்டல் தொழில் செய்வதாக கூறி பணத்தை வாங்கி ஏமாற்றியதாகவும், 7 கோடி ரூபாய்  ஏமாற்றி விட்டதுடன், கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி  வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக  தமிழக டி.ஜி.பி.யிடமும் சிந்துஜா புகார் செய்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் தாக்குதல், கொலை  மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் அருண்பிரகாஷ் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சிந்துஜாவின் தந்தை கொடுத்த மோசடி வழக்கில் அருண்பிரகாஷ் கைது செய்யப்பட்டு அவினாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Must Read : மனைவிக்கு வேறு வரன் தேடி மேட்ரிமோனியில் பதிவிட்ட அமெரிக்க மாப்பிள்ளை.. கம்பி என்ன வைத்த மாமனார்!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கோவை தங்கம் தற்போது திமுகவில் உறுப்பினராக உள்ளார்.  இந்நிலையில், கோவை தங்கத்தின் மருமகன் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: