• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு மூன்று மடங்கு உயர்ந்த பூக்களின் விலை

கோவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு மூன்று மடங்கு உயர்ந்த பூக்களின் விலை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோயம்புத்தூரில் ஆயுதபூஜையை முன்னிட்டு பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

  • Share this:
    கோவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜைக்கான பொருட்கள் வாங்க பூ மார்க்கெட் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி கூடினர். பூக்களின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு விலை உயர்ந்தாலும் பொதுமக்கள் அவற்றை வாங்கி சென்றனர்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஆயுதபூஜை கொண்டாட்டங்கள் தடைபட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தொற்று குறைந்து இருப்பதன் காரணமாக ஆயுதபூஜைக்கான பொருட்கள் விற்பனை களைகட்டி வருகின்றது. கோவை பூ மார்க்கெட் பகுதியில் பூஜைக்கு தேவையான பூக்கள் விற்பனை இன்று காலை முதல் பரபரப்பாக விற்று வருகின்றது. வழக்கத்தை விட இரண்டு முதல் 3 மடங்கு பூக்களின் விலை அதிகமாக இருக்கின்றது. கடந்த வாரம் 80 ரூபாயக்கு விற்கப்பட்ட சாமந்தி பூவின் இன்றையவிலை 200 ரூபாயாகவும், 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று 1,200 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகின்றது.

    கடந்த வாரம் கிலோ100 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளி பூவின் இன்றைய விலை 450 ரூபாயாகவும், 6 ரூபாய்க்கு விற்கப்பட்ட தாமரையின் இன்றைய விலை 30 ரூபாயாகவும் இருந்தது. கடந்த வாரம் 60 ரூபாயக்கு விற்பனையான சம்மங்கி பூ இன்று 300 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட சாதிமுல்லை 600 ரூபாய்க்கும் விற்பனையாகின்றது. 200 ரூபாய்க்கு விற்பனையான முல்லை இன்று 800 ரூபாய்க்கும் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட பட்டுப்பூ 100 ரூபாய்க்கும் விற்பனையாகின்றது.

    இரு வருடங்களுக்கு பின்னர் வியாபாரம் களை கட்டிவருவதாக பூ வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதே வேளையில் பூக்களின் விலை பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும் வேறு வழியின்றி வாங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் பூக்களை வாங்க வந்த பொதுமக்கள் தெரிவித்தனர். தொழில் கூடங்கள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் ஆயுத பூஜை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பூக்களை வாங்கி சென்று கொண்டு இருக்கின்றனர். பெரும்பாலான மக்கள் முக்கவசம் அணிந்திருத்தாலும் சமூக இடைவெளி இன்றி ஒன்று கூடிய நிலையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழலை இந்த மக்கள் கூட்டம் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: