தனியார் பஞ்சு குடோனில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
தனியார் பஞ்சு குடோனில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
தனியார் பஞ்சு குடோனில் தீ விபத்து
Coimbatore District : கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே தனியார் பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமானது. குடோனில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கோவையில் தனியார் பஞ்சு மில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து சாம்பலானது.
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரை அடுத்த கரியம்பாளையம் பகுதியில் மயிலேஸ்வரி என்பவருக்கு சொந்தமான பஞ்சு மில் குடோன் உள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக கடந்த சில நாட்களாக குடோன் இயக்கப்படவில்லை. தொழிலாளர்கள் யாரும் இல்லாத நிலையில் நேற்று மாலை குடோனில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு திடீரென தீ பிடித்து மளமளவென எரிய துவங்கியது. குடோனில் இருந்த பஞ்சு முழுவதும் தீ பரவி எரிந்த நிலையில் , அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த 5 தீயணைப்பு வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு குடோன் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. நல்வாய்ப்பாக குடோனில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
விபத்துக்கான காரணம் குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். இது குறித்து தீயணைப்பு துறையினரும், காவல் துறையனரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.