கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திணறலால் அம்மா மகள்கள் உட்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் விஜயலட்சுமி. இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என இரு மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் விஜயலட்சுமியின் கணவர் ஜோதி லிங்கம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.
இதில் விஜயலட்சுமியின் ஒரு மகள் ஐடி நிறுவனத்திலும் மற்றொருவர் பைனான்ஸ் தொழிலும் செய்துவருகிறார். இப்படியிருக்க இன்று காலை விஜயலட்சுமியின் வீட்டில் இருந்து புகை வருவதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
Also Read: செல்போன் திருடியதால் நண்பன் அடித்துக்கொலை.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
தகவல் அறிந்து விரைந்து வந்த கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர் வீட்டின் கதவை உடைத்து தீயை அணைத்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சமையல் அறையில் ஒரு பெண்ணும், அவரது அம்மாவும் படுக்கை அறையில் மற்றொரு பெண்ணும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர்.தகவல் அறிந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read: செல்போன் கொடுக்காத ஆத்திரத்தில் தங்கையை வெட்டிக்கொன்ற அக்கா.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்
இந்தநிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் யுபிஎஸ்-லிருந்து பிடித்த தீயை அணைக்க அஞ்சலி மற்றும் அவரது அம்மா ஆகியோர் முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் அங்கு பரவிய புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அஞ்சலி மற்றும் அம்மா விஜயலட்சுமி ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அதே சூழலில் அர்ச்சனா படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் பலியாகியுள்ளது.தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் கோவையில் உள்ள பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செய்தியாளர் : ஜெரால்ட் (கோயம்புத்தூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Death, Fire accident