• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நிதி நிறுவன மோசடி வழக்கு: ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்: நீதிமன்றம் உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கு: ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்: நீதிமன்றம் உத்தரவு

நிதி நிறுவனம் நடத்தி பலநூறு கோடி மோசடி செய்த ஹெலிகாப்டர் சகோதரர்கள்..

நிதி நிறுவனம் நடத்தி பலநூறு கோடி மோசடி செய்த ஹெலிகாப்டர் சகோதரர்கள்..

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு நான்கு நாள் போலீஸ் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களான எம்.ஆர்.கணேஷ்(50), எம்.ஆர்.சுவாமிநாதன்(48) ஆகிய இருவரும் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதில், அந்த நிதி நிறுவனத்தில் 15 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும், அதனை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாக கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா-பைரோஜ்பானு தம்பதியர் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Also read: கடந்த ஆட்சியில் திமுகவினர் மீது போடப்பட்ட வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக் கோரி காவல்துறை தலைவரிடம் மனு!

அதே போல் கும்பகோணம் டபீர் கீழத்தெருவைச் சேர்ந்த வெங்கட்ராமன், பார்வதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையை சகோதரர்கள் திருப்பி வழங்கவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 2ம் தேதி புகார் செய்தனர்.

இந்த வழக்கில், நிதி நிறுவனத்தை நடத்தி வந்த எம்.ஆர்.கணேஷின் மனைவி அகிலா (33), நிதி நிறுவன மேலாளர் ஸ்ரீகாந்த், கணக்காளர் மீரா, ஸ்ரீதர், வெங்கடேஷன் ஆகிய  ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்கிடையில் நிதி நிறுவன சகோதரர்கள் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த 5-ம் தேதி இருவரையும் புதுக்கோட்டை அருகே வேந்தன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்து, நள்ளிரவு கும்பகோணம் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து நீதிபதி தரணிதரன் இருவரையும் ஆக.19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார். அதன்படி கும்பகோணம் கிளை சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் கும்பகோணம் இரண்டாவது நடுவர் நீதிமன்ற நீதிமன்றத்தில் ஆஜராகி, நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதனிடம் விசாரிக்க வேண்டியுள்ளது என கூறி இருவரையும் 7 நாட்கள் போலீஸ் கஸ்டடி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது நீதிபதி விசாரித்தபோது, எம்.ஆர்.கணேஷின் வழக்கறிஞர்கள் போலீஸ் கஸ்டடி வழங்க கூடாது என வாதிட்டனர். மேலும், எம்.ஆர்.கணேஷ் நீதிபதியிடம், கைது செய்த அன்றே எல்லா விவரத்தையும் கூறிவிட்டேன். மேலும் என்னிடம் என்ன விசாரணை நடத்த போகிறார்கள் எனவே, போலீஸ் கஸ்டடி வழங்க கூடாது என கூறினார்.

இதையடுத்து நீதிபதி பாண்டிமகாராஜா இரு தரப்பினரின் வாதங்களை கேட்டறிந்த பின், நான்கு நாட்கள் போலீஸ் கஸ்டடி வழங்கி உத்திரவிட்டார். இதையடுத்து இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: