கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே சேம்புகரை வனப்பகுதியில் "ஆந்த்ராக்ஸ்" அறிகுறிகளுடன் பெண் யானை இறந்து கிடந்த சம்பவம் வனத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே சேம்புகரை வனப்பகுதியில் பெண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இறந்து கிடந்த பெண் யானையை வனத்துறையினர் ஆய்வு செய்தபோது யானையின் வாய் பகுதி மற்றும் ஆசனவாய் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் இருந்தது.
ஆந்த்ராக்ஸ் அறிகுறிகளுடன் பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்த வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக யானைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டனர். யானை கூட்டத்தில் இருந்த பெண் யானை தனியாக நகர்ந்து வந்து நோய்வாய்ப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Also read: கொங்குநாடு விவாதம்; மத்திய அரசும் முடிவு செய்யவில்லை, பாஜகவும் முடிவு செய்யவில்லை: எச்.ராஜா
யானையின் உடலில் இருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே ஆந்த்ராக்ஸ் தொற்று பரவல் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து தெரியவரும் எனவும் அதன் பின்னரே யானைக்கு பிரேதபரிசோதனை நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நாளை பிற்பகலுக்குள் பிரேதபரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இறந்த பெண் காட்டு யானைக்கு 13 வயது இருக்கலாம் என கூறப்படுகின்றது.
Also read: சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: பாஜக ஒன்றிய நிர்வாகியைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
ஆந்த்ராக்ஸ் அறிகுறிகளுடன் காட்டு யானை இறந்து கிடந்த சம்பவம் வனத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.