Home /News /tamil-nadu /

பெட்ரோலுக்கான வரியை பெயரளவிற்கே மாநில அரசு குறைத்தது - எஸ்.பி.வேலுமணி

பெட்ரோலுக்கான வரியை பெயரளவிற்கே மாநில அரசு குறைத்தது - எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

Coimbatore ADMK Protest | தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டதாகவும், பொய் வழக்கு போடுவதில் திமுக அரசை போல யாரும் இருக்க முடியாது எனவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
பெட்ரோலுக்கான வரியை பெயரளவிற்கே மாநில அரசு குறைத்ததாகவும், டீசலுக்கான வரியை மாநில அரசு குறைக்க வேண்டும், மத்திய அரசும் வரியை குறைக்க வேண்டும் என கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுக கொறாடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்தில் 8 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சொத்துவரி உயர்வை கண்டித்தும், தாலிக்கு தங்கம், இரு சக்கர வாகனம் வழங்கும், அம்மா கிளினிக் உட்பட பல  திட்டங்கள் ரத்தை கண்டித்தும் , கோவையில் கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைந்து நடத்த கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது என தெரிவித்தார்.

திமுக அரசு பல பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு விட்டது எனவும், மக்களுக்கு கொலுசு கொடுத்து விட்டு இப்போது போனஸ்ஸாக 4000 ரூபாய் வரியை போட்டு இருக்கின்றனர் என தெரிவித்தார்.

சொத்து வரியை கட்டும் போதுதான் மக்களுக்கு அதன் வீரியம் தெரியும் என தெரிவித்த அவர்,மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த சொல்லவில்லை, மத்திய  அரசு சில வழிகாட்டுதல்களைதான் சொல்லி இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு இதை செய்தது, ஆனால் சொத்துவரியை அப்போதைய அதிமுக அரசு உயர்த்தப்பட வில்லை என தெரிவித்த அவர், சொத்துவரி உயர்வை கண்டிப்பாக ரத்து செய்ய வேண்டும்  இல்லை எனில் கடுமையாக போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய்விட்டதாகவும், பொய் வழக்கு போடுவதில் திமுக அரசை போல யாரும் இருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசு கண்டிப்பாக சொத்துவரி உயர்வை நிறுத்த வேண்டும் எனவும், வசூல் பண்ணும் போது மோசமான விளைவுகள் ஏற்படும் என தெரிவித்த அவர் திமுக அரசு விளம்பரத்தால் ஓடுகின்றது எனவும் தெரிவித்தார். பொள்ளாச்சி விவகாரத்தை பெரிதாக்கியவர்கள் எல்லாம், விருதுநகர் சம்பவத்திற்கு பேசவே இல்லை எனவும்  பத்திரிகைகள் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகின்றது எனவும், பத்திரிகைகள் நினைத்தால் இந்த ஆட்சி மாறிவிடும் எனவும் பேசினார்.

இதனை தொடர்ந்து பேட்டியளித்த அவர், தாலிக்கு தங்கம் திட்டம் , அம்மா கிளினிக், அம்மா இருசககர வாகனம் திட்டம் ஆகியவற்றை மீண்டும் செயல்படுத்த  வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கோவையில் நிலுவையில் இருக்கும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும்,பெட்ரோல்,டீசல் விலை உயர்வை பொறுத்த வரை எல்லா மாநில அரசும் வரியை குறைத்தார்கள் எனவும், திமுக பெயரளிவிற்கு பெட்ரொருக்கு மட்டும் வரியை குறைத்தார்கள் எனவும், டீசலுக்கு வரியை மாநில அரசு குறைக்க வேண்டும் மத்திய அரசும் வரியை குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.

Also read... காவல் நிலைய வாசலில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்.. கல்லூரி மாணவர்கள் சேட்டை

மத்திய அரசு பல சட்டங்களை கடுமையாக எதிர்க்கும்  திமுக அரசு, சொத்துவரிக்கு மத்திய அரசை காரணம் காட்டுகின்றது எனவும், சொத்து வரியை திமுக அரசுதான் உயர்த்தி இருக்கின்றது எனவும் தெரிவித்த அவர், அரசு பணத்தில் மானியத்தை கொடுத்து சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும்  தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். கடும் வெயில் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண் வயதான மூதாட்டி ஒருவர் மயக்கம் அடைத்தார். அவரை உடன் வந்தவர்கள் அழைத்து சென்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: S.P. Velumani

அடுத்த செய்தி