கோவை மாவட்டம் எட்டிமடை பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் போட்டியிட்டு கீதா ஆனந்தகுமார் எட்டிமடை பேரூராட்சி தலைவராகவும், மரகதமணி துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து வெற்றி பெற்ற தலைவர், துணை தலைவர்கள் முதல்வரை சந்திக்க சென்னை சென்றனர். அப்போது எட்டிமடை துணை தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக 12வது வார்டு கவுன்சிலர் சுகுணா செந்தில்குமாரையை திமுக தலைமை கழகம் அறிவித்தது, ஆனால் அறிவிப்பை மீறி திமுகவை சேர்ந்த 11-ஆவது வார்டு கவுன்சிலர் மரகதமணி போட்டியிட்டு வெற்றி பெற்றது தெரியவந்தது. இதனால் மரகதமணியை முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதிக்கவில்லை.
இந்நிலையில், தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் அதை ஏற்று, எட்டிமடை பேரூராட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மரகதமணி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
Must Read : உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தமிழகத்திலேயே மருத்துவப் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
இதற்கான கடிதத்தை எட்டிமடை பேரூராட்சி செயல் அலுவலர் சூசை இன்ப ராஜிடம் அவர் வழங்கியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.