கோவையில் நடிகர் சத்யராஜ் உறவினர் வீட்டை முற்றுகையிட்ட யானைகள்..

ஒரே வீட்டை முற்றுகையிட்ட யானைகள் கூட்டம்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே மலையடிவாரத்தில் உள்ள ஒரு வீட்டை 15 யானைகள் கொண்ட கூட்டம் முற்றுகையிட்டது அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
கோவையில் யானைகள் வலசை செல்லும் பாதையில் நடிகர் சத்தியராஜின் உறவினரான அபிராமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

அவ்வப்போது, இந்த தோட்டத்திற்குள் யானைகள் நுழைந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்வது வழக்கம். எப்போதும் ஒரு சில யானைகள் மட்டுமே வந்து செல்லும் இப்பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று ஒரே நேரத்தில் 15 யானைகள் கொண்ட கூட்டம் தோட்டத்திற்குள் நுழைந்தது.

ஓரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தோட்டத்திற்குள் வந்ததால் அங்கிருந்த பணியாளர்கள் அலறியடித்து வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றனர்.



இதனைத் தொடர்ந்து அங்கு வந்த யானைகள் தண்ணீர் தொட்டியில் விளையாடிபடி, தண்ணீர் குடித்து விட்டு சென்றது. வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கி இருந்த பொது மக்கள் இதை செல்போன் மூலம் பதிவு செய்த நிலையில் அந்த காட்சிகள் சமீபத்தில் வெளியானது.

அதில் வனப்பகுதியில் இருந்து ஒவ்வொரு யானையாக தண்ணீர் தொட்டிக்கு வருவதும் அங்கு நீர் அருந்துவதும் பின்னர் திரும்பவும் வனப்பகுதிக்குள் செல்வதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க... சென்னையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர்... மருத்துவர் உட்பட 2 பேர் கைது..



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: