காலில் இரத்த காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினரக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் உடல்நல குறைவாலும் அவுட் காய் [வெடி மருந்தாலும் ] இறந்து வருகிறது. இதனை கண்காணிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர் இந்நிலையில் நேற்று இரவு ஆலாந்துறை அடுத்த மடக்காடு பகுதியிலுள்ள தனியார் தோட்டத்தில் காட்டுயானை புகுந்ததாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானையை விரட்டி அடித்தனர்.
பின்னர் அப்பகுதிக்கு சென்று பார்க்கும்போது யானையின் ரத்த காயங்கள் அப்பகுதி முழுவதும் உள்ள வாழை மரம் மற்றும் புற்களில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காட்டு யானை உடலில் ரத்த காயம் எப்படி ஏற்பட்டது அவுட் காய் மூலம் கால்கள் வெடித்து சிதறியதா அல்லது லப்பர் துப்பாக்கி குண்டு மூலம் சுடப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டதா என்ற கோணத்தில் வனத்துறையினர் தீவிரமாக சோதனை செய்தனர்.
ALSO READ | 'தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்' - தமிழிசை சௌந்தரராஜன்
பின்னர் தனியார் தோட்டத்தில் மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதி முழுவதும் சோதனை செய்தனர் இதில் எதுவும் கிடைக்கவில்லை நேற்று இரவு அப்பகுதியில் இருந்து சென்ற காட்டு யானையை 40க்கு மேற்பட்ட வனத்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து நரசிபுரம், தேவராயபுரம், வெள்ளிங்கிரி மலை, பகுதிகளில் காட்டு யானையை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து கோவை வனக் கோட்ட பகுதியில் யானை இறப்பது சகஜமாகிவிட்டதால் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது
காலில் ரத்த காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினரக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் உடல்நல குறைவாலும் அவுட் காய் [மெடி மருந்தாலும் ] இறந்து வருகிறது. இதனை கண்காணிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு ஆலாந்துறை அடுத்த மடக்காடு பகுதியிலுள்ள தனியார் தோட்டத்தில் காட்டுயானை புகுந்ததாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானையை விரட்டி அடித்தனர்.
பின்னர் அப்பகுதிக்கு சென்று பார்க்கும்போது யானையின் ரத்த காயங்கள் அப்பகுதி முழுவதும் உள்ள வாழை மரம் மற்றும் புற்களில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காட்டு யானை உடலில் ரத்த காயம் எப்படி ஏற்பட்டது அவுட் காய் மூலம் கால்கள் வெடித்து சிதறியதா அல்லது லப்பர் துப்பாக்கி குண்டு மூலம் சுடப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டதா என்ற கோணத்தில் வனத்துறையினர் தீவிரமாக சோதனை செய்தனர்.
ALSO READ | தேர்வு பயம் போக்க ஏப்ரல் 1-ம் தேதி மாணவர்களுடன் உரையாற்றும் பிரதமர் மோடி
பின்னர் தனியார் தோட்டத்தில் மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதி முழுவதும் சோதனை செய்தனர். இதில் எதுவும் கிடைக்கவில்லை நேற்று இரவு அப்பகுதியில் இருந்து சென்ற காட்டு யானையை 40க்கு மேற்பட்ட வனத்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து நரசிபுரம், தேவராயபுரம், வெள்ளிங்கிரி மலை, பகுதிகளில் காட்டு யானையை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து கோவை வனக் கோட்ட பகுதியில் யானை இறப்பது சகஜமாகிவிட்டதால் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Elephant