ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோவையில் அதிமுக பிரமுகர் ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

கோவையில் அதிமுக பிரமுகர் ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

ஜெயராமன் வீடு

ஜெயராமன் வீடு

DVAC Raid : வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.வி. என்.ஜெயராமன் மற்றும் அவரது மனைவி கீர்த்தி ஆகியோர் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த  நெம்பர் 4  வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் ஜெயராமன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், அவரின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே  வீரபாண்டி புதூர் அருகேயுள்ள, அண்ணா நகரைச் சேர்ந்தவர் கே.வி.என்.ஜெயராமன். இவரது மனைவி கீர்த்தி. ஜெயராமன்  நெ.4 வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த இவர், தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் லதா, கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் சமீபத்தில் புகார் அளித்தார். அதில், 'கே.வி.என்.ஜெயராமன் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, தனக்கு அசையும் சொத்துகள், நகைகள், வங்கி வைப்புத் தொகை என மொத்தம் ரூ. 1 கோடியே 25 லட்சத்துக்கு இருப்பதாக கூறியிருந்தார். இந்த சொத்துகள் அனைத்தும் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 5 ஆண்டுகள் கடந்த பின்னர், கடந்த 2016-ம் ஆண்டு அவரின் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 43 லட்சமாக உயர்ந்துள்ளது. 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அவர் வருமானத்தைவிட அதிகமாக ரூ.1 கோடியே 45 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாகவும், இந்த சொத்துகள் மற்றும் நகைகள் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் வாங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Read More : நகராட்சி தலைவர் பதவியை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கி வெளியிட்ட அரசாணையை எதிர்த்து வழக்கு

இதன் பேரில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.வி. என்.ஜெயராமன் மற்றும் அவரது மனைவி கீர்த்தி ஆகியோர் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் ஜெயராமன் வீட்டுக்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 5 பேர்,  பிற்பகல் முதல் அவரது சோதனை நடத்தினர்.

Must Read : மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை வெளியீடு..நாமக்கல் மாணவி மாநில அளவில் முதலிடம்

இந்நிலையில் ஜெயராமன் வீட்டு முன்பாக ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.லஞ்ச ஒழிப்பு துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டுவாசலில் அமர்ந்து முழக்கமிட்டனர்.

இந்நிலையில், ஜெயராமன் வீட்டில், 11மணி நேரமாக நடைபெற்ற சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற்றவில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, Coimbatore, DVAC