பெண்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு சமூக செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதில் சைபர் குற்றங்களில் சிக்காமல் பொதுமக்கள் எப்படி செயல்பட வேண்டும் என ஆலோசனைகள் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் இரண்டாவது கருத்தாக பெண்கள் தங்களது புகைப்படங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.
சைபர் கிரைம் காவல்துறையின் இந்த கருத்துக்கு பெண்ணிய செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய சமூக செயற்பாட்டாளரும் கவிஞருமான நறுமுகை தேவி, தொடர்ச்சியாக இது போன்ற பெண்களின் உடை, புகைப்படம் தொடர்பாக கருத்துகள் செல்லப்பட்டு வருகின்றது எனவும் பொறுப்பான காவல் துறை புகைபடங்களை வெளியிடுவது குற்றங்களுக்கு காரணம் என்ற தொணியில் வெளியிட்டு இருப்பது கொஞ்சம் கூட ஏற்க முடியாத விசயம் என தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இத்தனை பெண்ணியவாதிகள் போராடி நீண்டகாலமாக போராடி கொண்டு வந்த தேரை மீண்டும் ஆயிரம் வருடம் பின் நோக்கி கொண்டு செல்லும் விதத்தில் காவல் துறை அறிக்கை இருப்பதாக தெரிவித்தார். சைபர் கிரைம் காவல்துறையின் இந்த அறிக்கை கண்டணத்திற்குரியது என தெரிவித்த அவர், காவல்துறை குற்றம் நடக்காமல் பார்த்துகொள்ள வைக்கும் முன் மாதிரியான கருத்துகளில் , இது போன்ற பிற்போக்கு தனமான கருத்துகள் இடம் பெற்று இருப்பது அபத்தமானது எனவும் தெரிவித்தார்.
இணையத்தில் பெண்கள் தங்கள் கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் அதை அரசின் கவனத்திற்கு சென்று சேர்ந்து வருவதாகவும், இது போன்ற சூழலில் காவல்துறையின் இது போன்ற அறிவிப்புகள் பெண்கள் இணையத்தை பயன்படுத்த விடாமல் தடுக்கும் நிலையையும் போராட்ட தன்மையை உருக்குலைக்கும் என அவர் தெரிவித்தார்.
Also read: டெல்லியில் தோனியை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், எம்.பி கதிர் ஆனந்த்!
கோவை சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்ட அறிக்கையில் பல்வேறு விழிப்புணர்வு கருத்துகள் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக யாராவது பணம் கேட்டு மிரட்டினால், உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறிமுகமில்லாத நபர்களிடம் வீடியோ கால் பேசுவதையும் தவிர்க்க வேண்டும் எனவும், அப்படி பேசும் போது ஸ்கிரீன் ரெக்கார்டர் எடுத்து வைத்து கொண்டு பணம் கேட்டு மிரட்ட வாய்ப்பு இருப்பதாகவும் சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Cyber crime, Facebook, Instagram, Social media