முகப்பு /செய்தி /தமிழ்நாடு / காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் அழியும் - அண்ணாமலை

காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் அழியும் - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

Coimbatore : பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட யாரும் வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்கள் - அண்ணாமலை

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு  செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது  பேசியவர், “தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்பது தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடாது, மொழியை திணித்தால் நாங்கள் ஏற்றுகொள்ளமாட்டோம்.செய்திக்காக கருத்து சொல்வபவர்களுக்கு நான் எப்படி கருத்து சொல்வது என தருமபுரி எம்.பி.செந்தில் கூறிய கருத்துக்கு  பதிலளித்த அவர்,பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட யாரும் வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்கள் என தெரிவித்தார்.

காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் அழியும் என தெரிவித்த அவர்,எல்.ஐ.சி இன்னும் அரசு நிறுவனம் தான் எனக் கூறினார்.  இழப்பை சந்திக்கின்ற நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்கிறோம். நானும் ராஜா என்று கூறி,தமிழக முதல்வர் இப்போது தான் துபாய்க்கு போய்விட்டு வந்தார். தமிழக முதல்வரை புகழ்ந்து தள்ளிய விக்கிரமராஜா ,தேர்தலுக்கு முன் மால்கள் ஏதும் தமிழகத்தில் வர அனுமதிக்கமாட்டோம் என்று சொன்னார். ஆனால் லூலு மால் வருவதற்கு காரணமானவரை விக்கிரமராஜா புகழ்ந்து தள்ளுகிறார்.

Also Read:  கடனை ஏற்கும்படி இந்தியாவிடம் இலங்கை கேட்பது நியாயமில்லை - அண்ணாமலை

திருமாவளவனை விவாதத்துக்கு கூப்பிட்டேன், அப்போது அந்த கட்சியிலிருந்து ஒரு தம்பி வந்து, நான் விவாதத்துக்கு வருகிறேன் என்றார். ஆனால் திருமாவளவன் அங்கு யாரும் செல்லாதிர்கள் என்று சொல்லிவிட்டார். நான் மூன்று புத்தகம் அவருக்கு அனுப்பிவிட்டேன். ஆனால் அங்கிருந்து ஏதும் வரவில்லை. விவாதத்திற்க்கும் வரவில்லை என தெரிவித்தார்.

மீண்டும் பிரஷாந்த் கிஷோர்  தமிழகத்திற்கு வந்து ,திமுகவிடம் மீண்டும் ஓப்பந்தம் போட்டு கட்சியை வளர்பார் எனக்கூறிய அவர், தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த முடியாது என்பது தேர்தலுக்கு முன்பு தெரியாதா ? என கேள்வி எழுப்பினார். தேர்தலுக்காக கவர்ச்சியான திட்டங்களை கொண்டு வந்து பொய் சொல்லி வாக்கு வாங்கி விட்டு  இப்போது நிலைப்பாட்டை மாற்றுகிறார்கள்.

6 மாதத்திற்கு முன்னே கோவையில் லூலு மால் வருவதற்கு ஆயத்த பணிகளை மேற்கொண்டு பணிகளை செய்ய துவங்கிவிட்டார்கள் ஆனால் லூலு மால் வருவதற்கு ஒப்பந்தம் இப்போது  போட்டதாக சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். மின் தட்டுப்பாடு எதனால் என்று அமைச்சரிடம் கேட்டால் நிலக்கரி தட்டுப்பாடு என்கிறார்கள். தமிழகத்தில் மணல் கடத்துபவர் , தண்ணீர் லாரி ஓட்டுபவரையெல்லாம் அமைச்சர் ஆக்கினால் இப்படிதான் பேசுவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  தெரிவித்தார்.

First published:

Tags: Annamalai, BJP, Coimbatore, Congress, DMK, MK Stalin, Tamil News, Tamilnadu