நாடு முழுவதும் இன்று 73வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் டெல்லியில் நடைபெறும் மாநில வாகனங்கள் அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்த்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்கள்
சென்னையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில் அணிவகுக்கும் என முதல்வர் மு.க
ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன் படி சென்னையில் வாகன அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில் கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் "இந்த ஆட்டம் போதுமா? கொழந்த..." என திமுக வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். கோவை மாநகர் கிழக்கு மண்டலம் பெரிய கடை வீதி சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Also Read : கம்பீரமாக வலம் வந்த அலங்கார ஊர்திகள்.... சென்னையில் சிறப்பாக கொண்டாடப்பட்ட குடியரசுதின விழா - புகைப்படங்கள்
இந்த போஸ்டரில் வ.உ.சிதம்பரனார், வேலு நாச்சியார், பாரதியார், மருது சகோதரர்கள், பெரியார் ஆகியோரின் புகைப்படங்களும், அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, முதல்வர் மு.க ஸ்டாலின், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
செய்தியாளர் : ஜெரால்ட், கோவை
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.