கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. இதில்
திமுக,
காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர்,
அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சொத்துவரி உயர்வு, குப்பைகள் எடுப்பது, சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது போன்ற தலைப்புகளில் உறுப்பினர்கள் காரசாரமான விவாதங்களை முன்வைத்தனர். மாமன்றத்தில் விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
அப்போது, கடைசி வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்த திமுகவின் 96வது வார்டு உறுப்பினர் குணசேகரன், தனது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார்.
Must Read : பெண்ணை கொலை செய்து, நிர்வாணமாக்கி, கல்லை கட்டி கிணற்றில் வீசிய உறவினர் கைது - பரபரப்பு வாக்குமூலம்
மாமன்றம் நடைபெறும் போது, உறுப்பினர்கள் யாரும் செல்போனில் பேசக்கூடாது என்பது மரபு . இந்நிலையில் ஆளும்கட்சி உறுப்பினரே மாமன்ற நிகழ்வுகளை கவனிக்காமல் வீடியோ காலில் சாவகாசமாக பேசிக்கொண்டிருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.