Home /News /tamil-nadu /

டீசல் கொள்முதல் விலை ரூ.25 அதிகரிப்பு.. பெட்ரோல் பங்க்-ல் டீசல் போடும் அரசுப்பேருந்துகள்

டீசல் கொள்முதல் விலை ரூ.25 அதிகரிப்பு.. பெட்ரோல் பங்க்-ல் டீசல் போடும் அரசுப்பேருந்துகள்

அரசுப்பேருந்து கோவை

அரசுப்பேருந்து கோவை

பெட்ரோல் பங்குகளில் இருந்து சில்லறை விலையில் வாங்கும் டீசலை அரசு போக்குவரத்து பணிமனைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

டீசல் மொத்த கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதன்  காரணமாக கோவை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான அரசு  போக்குவரத்து மண்டலங்களில்  உள்ள அரசு பேருந்துகளுக்கு பெட்ரோல் பங்குகளில் சில்லறை விலையில் டீசல் வாங்கப்பட்டு அரசு  பேருத்துகள் இயக்கப்படுகின்றது.

பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மொத்தமாக டீசல் கொள்முதல் செய்பவர்களுக்கு மட்டும் டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் ஆலைகள், போக்குவரத்துக் கழகங்கள், தொழில் நிறுவனங்களுக்கு எண்ணெய் நிறுவனங்களில் இருந்து மொத்தமாக டீசல் கொள்முதல் செய்து வரும்  நிலையில் ஒரு லிட்டர் டீசலுக்கு 25 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டது. கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கருங்கல்லால் அதிர்ந்த குருவாயூர் ரயில்.. பதறிய ஓட்டுநர் - வாலிபரை பிடித்து போலீஸ் விசாரணை

அதே வேளையில் சில்லறை விலையில் பெட்ரோல் பங்குகளில் போடப்படும் டீசலுக்கான விலை உயர்த்தப்படவில்லை. இதனால்  மொத்தமாக டீசல் கொள்முதல் செய்யும் பொழுது ஒரு லிட்டர் டீசலின் விலை 120 ரூபாய்க்கும் அதிகமாக வருகிறது. இதனை தொடர்ந்து மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களில் இருந்து டீசல் கொள்முதல் செய்வதை தமிழக அரசு நிறுத்தியது . இதனைத் தொடர்ந்து கோவை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு போக்குவரத்து பணிமனைகளில் உள்ள பேருந்துகளுக்கு பெட்ரோல் பங்குகளில் இருந்து சில்லறை விலையில் டீசல் வாங்கப்படுகிறது.

பெட்ரொல் பங்குகளில் இருந்து சில்லறை விலையில் வாங்கும் டீசலை அரசு போக்குவரத்து பணிமனைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு பணிமனையில் உள்ள டீசல் கிடங்குகளில்  நிரப்பபட்டு, அரசு பேருந்துகளுக்கு டீசல் போடப்படுகின்றது. கோவை மண்டலத்தில் 2600 பேருந்துகளுக்கு 2.75 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படும் நிலையில்  இந்த விலை உயர்வு போக்குவரத்து கழகங்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் எனவும் எனவே இதை தவிர்க்கவே சில்லறை விலையில் அரசு கொள்முதல் செய்து அரசு பேருந்துகளை இயக்குவதாக தொ.மு.ச அமைப்பின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

Also Read: கோவை தொழிலதிபரிடம் ரூ.97 லட்சம் மோசடி.. பிரபல நடிகரின் சகோதரர் கைது

டீசலை மானிய விலையில் கொடுக்க வேண்டிய மத்திய அரசு அதிகமான விலையில் கொடுப்பது கண்டிக்கத்தக்கது எனவும் தொ.மு.ச அமைப்பினர் தெரிவிக்கின்றனர். பெட்ரோல்  பங்குகளுக்கு சில்லறை விலையில் வரும் டீசல் லாரிகள் போக்குவரத்து கழகங்களுக்கு திருப்பபடுவதால் வருங்காலத்தில், பொதுமக்களுக்கும், லாரிகள் போன்ற கனரக வாகங்களுக்கும் சில்லறை விலையில் டீசல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும் எனவும் நுகர்வோர் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Coimbatore, Diesel, Govt Bus, Petrol, Petrol Diesel Price

அடுத்த செய்தி