• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்...

சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்...

Sabarimala Ayyappan | கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னட்டு பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை துவங்கினர்.

  • Share this:
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருப்பார்கள். அப்போது இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந்தேதியான இன்று கோவில்களுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர்.

மேலும் படிக்க... கார்த்திகை மாதம் 2021 - விசேஷங்கள், விழாக்கள்

இதன் ஒரு பகுதியாக இன்று கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் மாலை அணிந்து கொண்டனர். செண்டை மேளம் முழங்க ஏராளமான ஐயப்பன் பக்தர்கள் காலை முதல் மாலை அணிந்து வருகின்றனர். முதல் முறையாக மாலை போடும் கன்னிசாமிகளும் குருசாமி உதவியுடன் மாலை அணிந்து வருகின்றனர். இன்று முதல் 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதற்காக விரதத்தை துவங்கியுள்ளனர். இதே போன்று கோவையில் உள்ள முக்கிய கோவில்களில் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரத்தை துவங்கினர்.

மேலும் படிக்க... கற்பூர காடு, சரணம் சொல்லியே... ஐயப்பன் பாடல்கள் 2021...

மேலும் படிக்க... இன்று கார்த்திகை மாத பிறப்பு... விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்...

மேலும் படிக்க... சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிறப்புகளும் அதன் 18 படிகளும்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: