ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தலின் பேரில் தமுமுக நடத்தி வந்த மருத்துவமனை இடிப்பு: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தலின் பேரில் தமுமுக நடத்தி வந்த மருத்துவமனை இடிப்பு: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தலின் பேரில் தமுமுக நடத்தி வந்த மருத்துவமனை இடிப்பு: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தலின் பேரில் தமுமுக நடத்தி வந்த மருத்துவமனை இடிப்பு: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

கலைஞர் முதல்வராக இருந்த போது அரசு நிலத்தில் 12 ஆண்டுகளுக்கு மேல் யாரேனும் இருந்தால் அதற்கான கட்டணங்களை வசூலித்து விட்டு அந்த இடத்தை தர வேண்டும் என்று அரசாணை இருந்தது என்றார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  அறிவுறுத்தலின் பேரில் தமுமுக நடத்தி வந்த மருத்துவமனை இடிக்கப்பட்டது எனவும், அந்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள தமுமுக அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேகதாதுவில்  அணை கட்டுவதை கர்நாடக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது, அணைக்கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவர். இது குறித்து விவாதிக்க ஜூலை 12ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

யுஏபிஏ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸ்டேன் சாமி உயிரிழந்துள்ளார், இந்த உயிரிழப்பை சாதாரண உயிரிழப்பாக எடுத்துக்கொள்ள முடியாது, பிரதமரும் உள்துறை அமைச்சரும்  பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை சிறையில் அடைத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவையில் தமுமுக கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. போத்தனூர் கஸ்தூரி நகரில் தமுமுக ஒரு சிறிய மருத்துவமனையை நடத்தி வந்த நிலையில், இதனை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அரசு அதிகாரிகள்  இடித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் விசுவாசிகளாக உள்ள மதுக்கரை தாசில்தாரும், போத்தனூர் காவல் ஆய்வளரும் கொடுத்த தகவலின் அடிப்படையில்  இடிக்கப்பட்டுள்ளது. அது ஆக்கிரமிப்பு பகுதியாக இருந்தாலும் முன்னறிவிப்பு நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும்,  கலைஞர் முதல்வராக இருந்த போது அரசு நிலத்தில் 12 ஆண்டுகளுக்கு மேல் யாரேனும் இருந்தால் அதற்கான கட்டணங்களை வசூலித்து விட்டு அந்த இடத்தை தர வேண்டும் என்று அரசாணை இருந்தது. இதனையும் மீறி முன்னாள் அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் மருத்துவமனையை இடித்துள்ளனர். எனவே அந்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பான  கோரிக்கை மனுவினை  தமிழக முதல்வரிட தர இருக்கின்றோம்.

Also read: ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை: எஸ்.ஆர்.சேகர் விமர்சனம்

டி.கே மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த சில கடை வியாபாரிகளுக்கு வேறு இடம் தருவதாக கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டது, ஆனால்  88 வியாபாரிகளுக்கு கடைகள் தரப்படவில்லை,  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுள் தண்டனை பெற்றிருக்க கூடியவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வைத்து வருகிறோம், ஆயுள் தண்டனை பெற்றுள்ளவர்கள் பலரும் பொறுப்புள்ள குடிமக்களாக மாறி உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Published by:Esakki Raja
First published:

Tags: Coimbatore, Jawahirullah, SP Velumani