வானதி சீனிவாசன் குறித்து முகநூலில் அவதூறு பதிவு: நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் பாஜக மகளிரணியினர் புகார்

வானதி சீனிவாசன்

முகநூலில் ஆபாசமாக ரவிசங்கர், ஜெகநாதன் என்ற பதிவர்கள் உட்பட பலர் இது போல செய்வதாகவும், புகார் அளித்துள்ளனர்.

  • Share this:
பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்ககோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிரணியினர் புகார் மனு அளித்தனர்.

பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் குறித்து சிலர் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டு வருவதாக கூறப்படுகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் வானதி சீனிவாசன் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று பா.ஜ.க மகளிரணியினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

முகநூலில் ஆபாசமாக ரவிசங்கர், ஜெகநாதன் என்ற பதிவர்கள் உட்பட பலர் இது போல செய்வதாகவும், கீதா என்ற பெண்மணி கீதா டிவி என்ற யூடியூப் சேனல் மூலம் பாஜகவுக்கு அவப்பெயர் எற்படுத்தும் வகையில் நடப்பதுடன், தனி மனித தாக்குதலில் ஈடுபடுவதாகவும் புகார் மனுவில் மகளிரணியினர் தெரிவித்து இருந்தனர்.

Also read: மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முயல்வது என்ன நியாயம்? - எல்.முருகன் கேள்வி

மேலும், கோவை மாநகர காவல்துறை முகநூல் பதிவுகளை ஆய்வு செய்து ஆபாச பதிவுகளை அகற்றுவதுடன், சம்பந்தபட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பா.ஐ.க மகளிரணியினர் வலியுறுத்தியுள்ளனர்.
Published by:Esakki Raja
First published: