தினமும் 5000 பேருக்கு இலவச பிரியாணி.. கோவை தன்னார்வலருக்கு குவியும் பாராட்டு!

பிரியாணி

சாலையில் ஆதரவற்றவர்களுக்கு பிரியாணியுடன், தண்ணீர் பட்டில்களையும் வழங்கி வருகிறார்.

 • Share this:
  கோவையில் கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காமல் தவிப்போருக்கு கோவையை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் ஊட்டச்சத்து மிக்க முட்டை பிரியாணி சிக்கன் பிரியாணி தினமும் 5 ஆயிரம் பேருக்கு உணவளித்து வருகிறார்.

  கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலாகி உள்ளது. மேலும் தற்போது தளர்வற்ற ஊரடங்கு அமலில் உள்ளதால், கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாததால், சாலை ஓரங்களில் இருப்போர் மற்றும் பிற மாநிலம் செல்ல ரயில் நிலையங்களில் காத்திருப்போர் உணவு கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் கோவையை சேர்ந்த தன்னார்வலர் ரபீக் என்பவர் கடந்த கொரோனா முதல் அலையிலேயே கோவையில் உணவின்றி தவித்த வட மாநில தொழிலாளர்களுக்கு நேரடியாக சென்று உணவுகளை வழங்கினார். அதற்காக தனது குடும்ப உறுப்பினர்கள் உதவியோடு நிதியை தயார் செய்து, தினமும் உணவு வழங்கினார். தற்போது இரண்டாம் அலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கடுமையான கட்டுப்பாடுகள் அமலாக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக முதல் அலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகபட்சமாக 500 வரை மட்டுமே இருக்கும், பெரும்பாளும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மட்டுமே நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.

  ஆனால் இரண்டாம் அலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து மருத்துவமனையில் படுக்கை வசதிகள் கூட இல்லாத நிலையில் ஆம்புலன்ஸிலேயே நோயாளிகள் காத்திருந்தனர். இதனால் நோயாளிகளுடன் வருவோர், ஆதரவற்றோர், ஏழை, எளிய மக்கள் என அனைத்து தரப்பினருக்கு உணவு வழங்க சாய்பாபா காலணி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தை பெற்று அங்கு தினமும் 5 ஆயிரம் பேருக்கு உணவு தயார் செய்யப்பட்டு உணவில்லாதவர்களுக்கு ரபீக் உணவு வழங்கி வருகிறார்.

  குறிப்பாக எதிர்ப்பு சத்து அதிகம் தேவை என்பதால் அனைவருக்கும் ஒரே மாதிரி பிரியாணி தயார் செய்யப்பட்டு சிக்கன் அல்லது முட்டையுடன் வழங்கி வருகின்றனர். தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியோடு உணவு கிடைக்காமல் தவிப்போருக்கு உணவு வழங்கும் ரபீக் யாரிடமும் இதற்காக பணம் வசூல் செய்யாமலும், வரும் உதவிகளை பெறாமல் தன் சொந்த முயற்சியில் உணத்து வருகிறார். ரஃபீக்கிற்கு அந்த பகுதியில் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

  Read More:   விபத்துக்குள்ளாகி ஒரு மணிநேரமாக சுயநினைவின்றி கிடந்தவருக்கு சிபிஆர் சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய இளைஞர்!

  சாலையில் ஆதரவற்றவர்களுக்கு பிரியாணியுடன், தண்ணீர் பட்டில்களையும் வழங்கி வருகிறார். தினமும் அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையம் மட்டுமல்லாமல், கொரோனாவால் தனிமைபடுத்தப்பட்டவர்கள், மற்றும் சிரமப்படுவோர் வீட்டிற்கு நேரில் சென்று உணவுகளை வழங்கி வருகிறார்.

  கோவை செய்தியாளர் வைரம்பெருமாள் அழகுராஜன்
  Published by:Arun
  First published: