Home /News /tamil-nadu /

ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்தவருக்கு ஆணுறை.. ஷாக் கொடுத்த ஸ்விகி - கோவை சம்பவம்

ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்தவருக்கு ஆணுறை.. ஷாக் கொடுத்த ஸ்விகி - கோவை சம்பவம்

கோவை சம்பவம்

கோவை சம்பவம்

ஸ்விகி சேவையை நம்பியதால் குழந்தைகளுக்கு ஐஸ்கீரிம் வாங்கி கொடுக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் வருத்தம் என பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவையில் ஸ்விகி  வாடிக்கையாளர் ஒருவர் ஐஸ்கிரீம்,சிப்ஸ் போன்றவற்றை ஆர்டர் செய்த நிலையில் அவருக்கு ஆணுறை பாக்கெட்டுகள் அனுப்பபட்டுள்ளது.இது தொடர்பாக வாடிக்கையாளரிடம் ஸ்விகி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் ஸ்விகி செயலியில்  குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆகியவற்றவை ஆர்டர் செய்தார். இந்நிலையில் ஸ்விகி டெலிவரி பாய் மூலம்  வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. பார்சலை திறந்து பார்த்த போது  பெரியசாமிக்கு  அதிர்ச்சி காத்திருந்தது. அதில் சிப்ஸ், ஐஸ்கிரீமிற்கு பதிலாக இரண்டு ஆணுறை பாக்கெட்டுகள் அனுப்பப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பெரியசாமி இது குறித்து தனது  ட்விட்டர் பக்கத்தில் ஸ்விகி  நிறுவனத்தை டேக் செய்து பதிவிட்டார்.

TNTRB : முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு

இதனையடுத்து தவறு நடந்ததை உணர்ந்த ஸ்விகி நிறுவனம் பெரியசாமியிடம் மன்னிப்பு கேட்டது. மேலும் பெரியசாமி செலுத்திய தொகையினை உடனடியாக அவரது கணக்கிற்கு திருப்பி அனுப்பியதுடன் , ஆணுறை பாக்கெட்டுகளையும் திரும்ப பெற்றுக்கொண்டது.

அசுரவேகத்தில் கார் மோதியதில் பறந்த ஆட்டோ.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

ஸ்விகி நிறுவனத்தின் தவறால் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து சமூக வலைதளத்தில் பல்வேறு நபர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குழந்தைகளுக்காக ஆர்டர் செய்த  ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்றவற்றை புகாருக்கு பின் அந்த நிறுவனம்  கொண்டு வந்து கொடுத்து இருக்க வேண்டும் . அதைவிடுத்து  பணத்தை  திருப்பி கொடுப்பதன்  மூலம் அந்த நிறுவனம்  தனது சேவையினை முறையாக செய்யவில்லை எனவும், அந்த நிறுவன சேவையை நம்பியதால் குழந்தைகளுக்கு ஐஸ்கீரிம், சிப்ஸ் வாங்கி கொடுக்காததால் குழந்தைகள் ஏமாற்றம் அடைந்ததுதான் வருத்தம் எனவும் பணம் இங்கு பிரச்சினையில்லை எனவும் வாடிக்கையாளர்  பெரியசாமி தெரிவித்தார்.
Published by:Musthak
First published:

Tags: Coimbatore, Food, Swiggy, Tamil News

அடுத்த செய்தி