• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Covid-19: வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி கணக்கெடுப்பு - கோவை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்.. 

Covid-19: வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி கணக்கெடுப்பு - கோவை மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்.. 

கோவை மாநகராட்சி ஊழியர்கள்

கோவை மாநகராட்சி ஊழியர்கள்

பொது மக்களிடம் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை அதிகாரிகள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியநிலையில் கணக்கெடுப்பு பணிகளானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சென்னையில் கையாண்ட வழி முறைகளை கோவையிலும் கையாண்டு  தொற்று பரவலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதற்காக வீடு,வீடாக சென்று காய்ச்சல்,சளி பரிசோதனைகளை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று பரவல் மிக வேகமாக இருந்து வருகின்றது. சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று கட்டுக்குள் வந்தாலும் கோவை, திருப்பூர், ஈரோடு,சேலம், திருச்சி,மதுரை போன்ற முக்கிய மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக கடந்த சில தினங்களாக தொற்று பரவலில் கோவை மாவட்டம் முதலிடத்தில் இருந்து வருகின்றது.

கோவை மாவட்டத்தில் இதுவரை 39,047 பேர் தொற்று காரணமாக சிகிச்சையில் இருக்கின்றனர். தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை சராசரியாக தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டதுடன், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை , திருப்பூர், ஈரோடு, நீலகிரி,சேலம் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுடன் நோய்தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Also Read: ஆம்புலன்ஸ் மறுப்பு: மருத்துவமனையிலிருந்து நடந்தே வீடு திரும்பும் வழியில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்!

இந்நிலையில் கோவை மவட்டத்தில் கொரொனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.கோவை மாவட்டத்தில் 632 நகர்புற பகுதிகள்,302 ஊரகப்பகுதிகளில் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால் இவை கட்டுபாட்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது.
குறிப்பாக வீடு,வீடாக சென்று காய்ச்சல், சளி கணக்கெடுப்பு பணியினை கோவை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே இந்த பணி நடைபெற்று வந்தாலும் தற்போது இந்த பணியை  தீவிரப்படுத்தபட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி முழுவதும் 2400 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் மாநகராட்சி பகுதியில் கடந்த15 நாட்களில் தொற்று பரவல்  விகிதம் அதிகரித்துள்ளதாகவும்,இதனையடுத்து சென்னையில் கையாண்ட வழி முறைகளை கோவையிலும் கையாளப்பட்டு கொரொனா தொற்று பரவலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

Also Read: உறங்காத இரவுகள்.. ஒன்றரை வருட வேதனை -ஜடேஜா ஷேரிங்ஸ்

வீடு வீடாக சென்று காய்ச்சல்,சளி கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தபட்டு இருப்பதாகவும், ஒரு வார்டுக்கு 50 பேர் வீதம் 100 மாநகராட்சி வார்டுகளிலும் கணக்கெடுப்பு பணியானது நடத்தப்படுவதாகவும்,ஒரு பணியாளர் தலா 100 வீடுகளுக்கு கணக்கு எடுக்க வேண்டும் எனவும், அப்படி செல்லும் போது பொதுமக்களை உடனடியாக சோதனைக்கு உட்படுத்தி நோயின் அறிகுறி இருப்பின் அவர்கள் தனிமைபடுத்தபட்டு சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வீடு வீடாக காய்ச்சல்,சளி கணக்கெடுப்பிற்கு செல்லும் தற்காலிக ஊழியர்களுக்கு , எப்படி சோதனை செய்ய வேண்டும், பொது மக்களிடம் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை அதிகாரிகள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியநிலையில் கணக்கெடுப்பு பணிகளானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் நோய் தொற்றை கண்டறிய வந்த மாநகராட்சி ஊழியர்கள், உடல்வெப்ப நிலையை பரிசோதனை செய்ததுடன், யாருக்கும் காய்ச்சல் இருக்கின்றதா என்பது குறித்து விசாரிப்பதாகவும், ஜிங்க் மாத்திரைகள், காய்ச்சல் மாத்திரைகள் வழங்குவதுடன், என்ன தேவை என்றாலும் உடனடியாக தொடர்பு கொள்ளும் படி கூறி தொலைபேசி எண்களை கொடுத்து செல்வதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

வீடு, விடாக வந்து பரிசோதனை செய்வதை வரவேற்றுள்ள பொது மக்கள், இதே போல வயதானவர்களுக்கு வீடு வீடாக வந்து தடுப்பூசி போட்டால் வசதியாக இருக்கும் எனவும், இதனால் தடுப்பூசி போடுவதற்காக நீண்ட நேரம் கூட்டத்தில் காத்திருப்பதை தவிர்க்க முடியும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீடு வீடாக காய்ச்சல் ,சளி உள்ளிட்ட அறிகுறி இருப்பவர்களை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தபட்டு இருக்கும் நிலையில் , தொற்றாளர்களை கண்டறிந்து நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. கடந்த 27ம்  தேதி கோவை மாவட்டத்தில் 4734 ஆக இருந்த கொரொனா தொற்று எண்ணிக்கை நேற்று 3537ஆக குறைந்திருக்கின்றது.இதை மேலும் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதே வேளையில்,தொற்று அறிகுறிகளுடன் பரிசோதனை செய்பவர்களுக்கு  முடிவுகள் வழங்க மூன்று நாட்கள் வரை ஆகின்றது. இந்த காலதாமதத்தை குறைத்து பரிசோதனைகளை விரைவு படுத்தவும்  விரைவில் பரிசோதனைகள் முடிவுகள்  வழங்கப்பட்டால் இன்னும் விரைவாக தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: