ஆடி மாதம் ஆத்தாவுக்கே இந்த நிலையா.. கோயில்களை திறக்க கோரி சாணிப்பவுடர் குடித்த பெண் - கோவையில் பரபரப்பு

கோவை

வெள்ளி கிழமை கோவில்களை திறக்க கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி போலீசாரின் காலில் விழுந்து கதறிய பெண்ணால் பரபரப்பு.

  • Share this:
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிகிழமைகளில் கோவில்களை திறக்க வலியுறுத்தி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. இவர்  அவிநாசி சாலையில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு  பூ விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த விஜயா, அலுவலக வாளாகத்தில் அவர்  கொண்டு வந்திருந்த சாணிப் பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனயாக அவரை தடுத்தனர்.  அப்போது  ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் தண்டுமாரியம்மன் கோவில், கோனியம்மன் கோவில்களை  திறக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும்  போலீசாரின் கால்களில் விழுந்து கதறிய அவர், ஆடி மாத உற்சவம் நடைபெறும் வெள்ளிக்கிழமைகளில் கோவில்களை பூட்டினால் லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும், ஆத்தாவுக்கே இந்த நிலையா என ஆதங்கப்பட்டு கூச்சலிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து விஜயாவை சமரசப்படுத்திய போலீசார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வெளியேற்றி  விசாரணைக்காக பந்தய சாலை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோவில்களை திறக்க கூறி  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: