கோவையில் 3 மாத பேரக்குழந்தையின் பிறப்புறுப்பை அறுத்து கொன்றுவிட்டு, பேத்தியை கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்ற பாட்டியை துடியலூர் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகர் நாகப்பா காலனி பகுதியில் குடியிருந்து வருபவர்கள் பாஸ்கரன் - ஐஸ்வர்யா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது. ஆண் குழந்தைக்கு ஆரியன் என்றும் பெண் குழந்தைக்கு ஆரிகா ஸ்ரீ என்றும் பெயரிட்டிருந்தனர். குழந்தைகளை பார்த்து கொள்வதற்காக மதுரையில் இருந்து ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தியும் இவர்களுடன் தங்கியிருந்தார். கடந்த2 மாதமாக சாந்தி இவர்களுடன் தங்கியிருந்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு குழந்தைகளின் தாய் ஐஸ்வரியா மருந்து வாங்குவதற்காக கடைக்குச் சென்று விட்டு திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த சாந்தி குழந்தையை யாரோ வந்து எடுத்துச் சென்றுவிட்டதாக என தெரிவித்துள்ளர். இதனால் அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் தேடியபோது ஆண் குழந்தை படுக்கையில் பிறப்புறுப்பில் காயங்களுடன் கிடந்துள்ளது. பெண் குழந்தை வீட்டில் கழிப்பறைக்குள் அழுக்கு துணியால் வைத்து மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளனது.
அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா அக்குழந்தையை தூக்கிய போது ஆண் குழந்தையின் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்துள்ளது. பெண் குழந்தை மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. இதனையடுத்து பாட்டி சாந்தி வீட்டில் இருந்து தப்பி ஓட்டியுள்ளார். இது குறித்து ஐஸ்வர்யா அவரது கணவர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் காயமடைந்த பெண் குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த ஆண் குழந்தையை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து பேரக்குழந்தையை கொன்றுவிட்டு பேத்தியை கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயற்சி செய்து விட்டு தப்பி ஓடிய பாட்டி சாந்தியை போலீசார் தேடி வருகின்றனர்.
சாந்திக்கு 15 ஆண்டுகளாக மனரீதியான பாதிப்புடன் இருந்து வந்தவர் என்பது போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது . இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய சாந்தியை போலிசார் தேடிவருகின்றனர்.மனநிலை பாதிக்கப்பட்ட சாந்தியின் கணவர் மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருவது குறிப்பிடதக்கது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.