இளம்பெண்களை கொத்தடிமைகளாக பயன்படுத்திய பஞ்சாலை நிர்வாகம் - 7 பெண்களை மீட்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர்

இளம்பெண்கள் மீட்பு

கோவையில் கொத்தடிமையாக இருந்த ஜார்கண்ட் மாநில பெண் தொழிலாளர்கள் மீட்பு ஆலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்

  • Share this:
கோவை அருகே குமரன் பஞ்சாலையில்  கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு இருந்த 7 இளம் பெண்களை  சிஐடியு தொழிற்சங்கத்தினர் மீட்டனர்.

கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள  குமரன் மில்லில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில  வாரங்களுக்கு முன்பு ஜார்கண்ட மாநிலத்தில் இருந்து பெண்கள் வேலைக்காக அழைத்து வரப்பட்டனர். வேலைக்காக வந்த பெண்களை  கொத்தடிமைகளாக ஆலை நிர்வாகம் கடுமையான வேலை வாங்கியதாக கூறப்படுகின்றது.

Also Read:  நடிகைகளை விருந்தாக்கவில்லை என்பதால் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டேன் - தயாரிப்பாளர் மீது இயக்குநர் பரபரப்பு புகார்

சொந்த ஊருக்கு செல்லவும் ஆலை நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில்,  ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 7 பெண்கள் தங்களை மீட்கும்படி சொந்த ஊருக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ அனுப்பினர். இதனையடுத்து அங்கிருந்து கோவை மாவட்ட சிஐடியு அலுவலகத்தை தொடர்பு கொண்டனர். சிஐடியு அமைப்பினர் ஆலை நிர்வாகத்தை தொடர்புக்கொண்டு தெரிவித்தனர். அவர்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்காததால் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 7 பெண் தொழிலாளர்களையும் ஆலை நிர்வாகம் வெளியே அனுப்பி விட்ட நிலையில் அவர்களை சிஐடியு அமைப்பினர் மீட்டனர். குறைவான ஊதியத்தை கொடுத்து ஆலை நிர்வாகம் உழைப்பு சுரண்டலை ஈடுபட்டிருந்தாகவும்,வேலை தேடி வரும் பெண்  தொழிலாளர்களை சட்டத்திற்கு உட்பட்டு வேலை வாங்காமல் குமரன் ஆலை நிர்வாகம் கூடுதலாக வேலை வாங்குவதாகவும் அதற்கேற்ற ஊதியம் வழங்குவதில்லை எனவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மொத்தம் 18 பேர் ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்தநிலையில் இதர 11 பெண்கள் நிலை என்னவென்று தெரியவில்லை எனவும் சிஐடியு அமைப்பினர் தெரிவிக்கின்றனர். வேலை நேரத்தை  தவிர  தொழிலாளர்கள்  நடமாட்ட தடை செய்வதே கொத்தடிமை முறைதான் என தெரிவித்த அவர்கள் பெண்களை சொந்த ஊருக்கு செல்ல விடாமல் அடைத்து வைத்திருந்த ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Also Read: மொட்டை கடிதத்தால் மாட்டிக்கொண்ட போலி பெண் வழக்கறிஞர் - ஷாக்கான பார் கவுன்சில்

மீட்கப்பட்ட 7 பெண்களையும்  ரயில் மூலம் சிஐடியு அமைப்பினர்  சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க  இருக்கின்றனர். 13 ஆயிரம் சம்பளம் என அழைத்து வந்து விடுமுறை இல்லாமல் 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கியதாக மீட்கப்பட்ட பெண்கள் தெரிவித்தனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: