கோவை இடையர்பாளையம் டி.வி.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் எட்வர்ட் ஜான். இவரது மனைவி கிரேஸ் பியூலா. தம்பதிக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். எட்வர்ட் ஜான் மதுவிற்கு அடிமையானவர். வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி கிரேஸ் பியூலாவின் சகோதரியின் திருமணம் கோவை சிஎஸ்ஐ தேவாலயத்தில் நடைபெற்றது. அப்போது கிரேஸ் பியூலா அவரது உறவினர் ஒருவருடன் செல்பி எடுத்துள்ளார். இதைப் பார்த்த அவரது கணவர் எட்வர்ட் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் மறுநாள் கிரேஸ் பியூலா தனது மகளுடன் இடையார்பாளையத்திற்கு தங்கை வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த எட்வர்ட் ஜான் செல்பி எடுத்தது குறித்து மனைவியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டு அவரை அடித்துள்ளார்.மேலும் அங்கிருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதில் காயமடைந்த கிரேஸ் பியூலா தனது தாய் தமிழ்ச்செல்விக்கும் செல்போன் மூலம் தகவலை தெரிவிக்கவே, அங்கு வந்த அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இதுகுறித்து தமிழ்ச்செல்வி துடியலூர் போலீசில் புகார் அளிக்கவே, வழக்குப்பதிவு செய்த போலீசார் எட்வர்ட் ஜானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.