ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அந்த 4 பேர் யார்... முபீன் தூக்கிச்சென்ற மர்மபொருள் என்ன? - சிசிடிவி அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை!

அந்த 4 பேர் யார்... முபீன் தூக்கிச்சென்ற மர்மபொருள் என்ன? - சிசிடிவி அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை!

உயிரிழந்த முபீன் - 4 பேர் எடுத்துச் செல்லும் பொருள்

உயிரிழந்த முபீன் - 4 பேர் எடுத்துச் செல்லும் பொருள்

கோவை நகரின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் வாகன சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் கார் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீனுடன் சனிக்கிழமை இரவு இருந்த 4 பேர் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கையில் எடுத்து செல்லும் மர்ம பொருள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் ஞாயிற்று கிழமை அதிகாலை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். காரில் இருந்து சிலிண்டர் வெடித்ததில் ஏராளமான ஆணிகள், கோலிகுண்டுகள் சிதறி கிடந்தன. இதனால் இதன் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. கோட்டைமேடு ஹாஜி முமகமது பிள்ளை ராவுத்தார் வீதியிலிருக்கும் அவரது வீட்டில்  இருந்து பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்க்கோல், சல்பர் போன்ற நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது.

Cyclone Sitrang: மேலும் தீவிரமெடுக்கும் சித்ரங் புயல் - எந்தெந்த பகுதிகளில் அலெர்ட்!

இவை சாதாரணமாக கிடைக்க கூடிய பொருட்கள் என்றாலும் இவற்றை கொண்டு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க முடியும் என்பதால் , எதற்காக இந்த பொருட்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டன என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜமேஷா முபீன் வீடு இருக்கும் பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தபட்டது.

அதில் சனிக்கிழமை நள்ளிரவு ஜமேஷா முபீனுடன் 4 பேர் இருப்பதும், சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட  5 பேரும் சேர்ந்து  மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள்  4 பேர் யார் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மடியில் கனமில்லை வழியில் பயமில்லை: ஆறுமுகசாமி விசாரணையில் அரசியல் உள்நோக்கம் உள்ளது: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

4 பேரிடம் விசாரணை நடத்தினால் என்ன பொருளை எடுத்து சென்றார்கள் என்பது தெரியவரும் என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கோவை நகரின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் வாகன சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.

Published by:Musthak
First published:

Tags: Coimbatore