கிராம உதவியாளரை காலில் விழ வைத்த விவகாரம் - குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை அன்னூர் விவகாரம்

கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ கூறியது விசாரணையில்  உறுதியாகின்றது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
கோவை அன்னூர் ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோரிடம் சத்தமாக பேசி அவர்களை பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததுடன், கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த கோபால்சாமி குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல்துறைக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையத்தில் கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த விவகாரம் தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் விசாரணைக் குழுவானது அமைக்கப்பட்டது. நேற்றைய தினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தனியாகவும், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தனியாகவும் விசாரணை நடத்தினர்.

Also Read: சாதி பாகுபாடு... அச்சுறுத்திய இளைஞர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கிராம உதவியாளர்.. - கோவையில் அதிர்ச்சி சம்பவம்

இரு தரப்பையும் சேர்ந்தவர்களை அழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு தனது விசாரணை அறிக்கையினை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கோவை  மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் வழங்கினார்.அந்த அறிக்கையில் கிராம உதவியாளர் முத்துச்சாமி, வி.ஏ.ஒ அலுவலகத்திற்கு வந்த கோபால்சாமியை தாக்கியதற்கான எந்த நேரடி சாட்சியமும்   இல்லை எனவும், அதேவேளையில் முத்துசாமியை காலில் விழ கூறியது விசாரணையில்  உறுதியாகின்றது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வி.ஏ.ஓ அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோரிடம் சத்தமாக பேசி அவர்களை பணி செய்யவிடாமல் இடையூறு செய்ததுடன், கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த கோபால்சாமி மீது  குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் கோவை மாவட்ட காவல் துறைக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து கோபால்சாமி மீது வழக்குப் பதிவு செய்வதற்கான நடவடிக்கையினை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொடுத்த உத்தரவில், இந்த விவகாரம் சாதியரீதியில்   நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: