ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பின்னணியில் ’கவுண்டிங் மிஷின்’.. புகைப்படம் கிளப்பிய சர்ச்சை.. வானதி சீனிவாசன் விளக்கம்!!

பின்னணியில் ’கவுண்டிங் மிஷின்’.. புகைப்படம் கிளப்பிய சர்ச்சை.. வானதி சீனிவாசன் விளக்கம்!!

 பின்னணியில் கவுண்டிங் மிஷின்.. புகைப்படம் கிளப்பிய சர்ச்சை..  வானதி சீனிவாசன் விளக்கம்!!

பின்னணியில் கவுண்டிங் மிஷின்.. புகைப்படம் கிளப்பிய சர்ச்சை.. வானதி சீனிவாசன் விளக்கம்!!

புகைப்பட பின்னணியில் "கவுண்டிங் மெஷின்" இருந்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன் போட்டியிட்டு, பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.

சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றபின், கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் அருகில் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்திற்கு வானதி சீனிவாசன் சென்றபோது அலுவலகத்திற்குள்  "தன லாபம்" என எழுதி வைத்து பூஜைகள் செய்தார். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் "தனலாபம்" என எழுதி வைக்கப்பட்டிருந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்நிலையில், சமீபத்தில் கோவை தெற்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  கமல்ஹாசனிடம், சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசனின செயல்பாடுகள் குறித்து  கேள்வி எழுப்பபட்டது. அதற்கு  சட்டமன்ற அலுவலகத்தில் "தனலாபம்" என எழுதி வைத்தது மட்டும்தான் தெரிகிறது என பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட படி பொதுமக்களை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சந்தித்து பேசினார். பின்னர் அம்மன் குளம் பகுதியில் உள்ள மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்த பின்னர் காணொலி காட்சி மூலம் ஒரு  கூட்டத்தில் பங்கேற்றார்.

Also read: நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தற்கொலை - முதல்வர் ஸ்டாலின் வேதனை!

அப்பொழுது வானதி சீனிவாசனின் அருகில் பணம் என்னும் கவுண்டிங் மெஷின் இருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்  வெளியான நிலையில், சமூக வலைதளவாசிகள் வானதி சீனிவாசன் குறித்து பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். "கவுண்டிங் மெஷின்" குறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில்,  கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் மக்களை சந்தித்து விட்டு வீட்டுக்கு வர நேரம் இல்லாத காரணத்தால், நண்பரின் அலுவலகத்தில் காணொளி கூட்டத்தில் கலந்து கொண்டேன். இது எனது அலுவலகம் அல்ல. கவுண்டிங் மெஷின் இருப்பதும் எனக்கு தெரியாது. அதற்குள் ஒரு சிலர் கற்பனை சிறகுகளை விரிக்கின்றனர் என பதிவிட்டுள்ளார். வானதி சீனிவாசனின் இந்த முகநூல் பதிவிற்கு  பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Esakki Raja
First published:

Tags: BJP, Vanathi srinivasan