கோவையில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது!

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது

பொது மக்கள் இன்று ஊசி போட மையங்களுக்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவை மாவட்டத்தில் இன்று  மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள 77 தடுப்பூசி மையங்களில் மாற்றுதிறனாளிகளுக்கு இன்று மதியம் 1 மணி முதல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தடுப்பூசி மையங்களுக்கும் தேவைக்கு ஏற்ப 100 முதல் 250 தடுப்பூசிகள் வரை பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுக்கு மட்டும் இன்று கோவி ஷீல்ட் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

காலை 10 மணி முதல் தடுப்பூசி போட திட்டமிட்டு இருந்த நிலையில் தடுப்பூசி வருகை தாமதமானதால் பிற்பகல் 1 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாற்றுத்திறனாளி என்பதற்கான அடையாள அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு கோவி ஷீல்ட் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

Also read... மறுபடியும் கேட்கிறேன்... மதுக்கடைகளை திறக்காதீர்... நிரந்தரமாக மூடுங்கள் - ராமதாஸ் கோரிக்கை!

மாநகர பகுதிகளில் 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள், புறநகர் பகுதிகளில் 46 பள்ளிகள் என 77 தடுப்பூசி முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்கள் வரிசையில் காத்திருந்து தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். பொது மக்கள் இன்று ஊசி போட மையங்களுக்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: