பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள பி ஆர் டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா மாணவிகள், பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் ஒரு மாத இடைவெளிக்குப் பின்பு நேற்று அனைத்து அரசு, மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை வி.ஆர்.டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் 1300 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளியில் 43 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.கடந்த சனிக்கிழமை 43 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சக ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
நேற்று அந்தப் பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் பொழுது அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் மாணவிகளை சமூக இடைவெளி இல்லாமல் நெருக்கமாக அமரவைத்து வகுப்புகள் நடைபெற்றது இதற்கு பெற்றோர் ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சுகாதார துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இன்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
செய்தியாளர் : ம.சக்திவேல் (பொள்ளாச்சி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.