முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமான இடங்களில் தொடரும் சோதனை

எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமான இடங்களில் தொடரும் சோதனை

தொடரும் சோதனை

தொடரும் சோதனை

வேலுமணியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படும் சந்திரபிரகாஷுக்கு  சொந்தமான கேசிபி என்ஜினியர்ஸ் நிறுவனத்தில் 2-வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு  நெருக்கமான சந்திரசேகர் மற்றும் சந்திரபிரகாசுக்கு சொந்தமான கே.சி்பி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாத  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், செந்தில்,  நெருங்கிய நண்பர்களான  சந்திரசேகர், சந்திர பிரகாஷ் உள்ளிட்ட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

Also Read: எஸ்.பி.வேலுமணி வீட்டில் விறுவிறு ரெய்டு.. நெருக்கமானவருக்கு நெஞ்சுவலி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோவை சுகுணாபுரம் வீடு, சகோதரர்கள் அன்பரசன், செந்தில்குமார் வீடுகள்  மற்றும் நண்பர்கள் உறவினர்கள் என அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். கோவையில் மட்டும்  42  இடங்களில் சோதனையானது நடைபெற்றது. 11 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் 13 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Also Read: எஸ்.பி. வேலுமணி மீது போடப்பட்டுள்ள வழக்குகள் என்ன? குற்றச்சாட்டுகள் என்ன, FIR என்ன சொல்கிறது

வேலுமணியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படும் சந்திரபிரகாஷுக்கு  சொந்தமான கேசிபி என்ஜினியர்ஸ் நிறுவனத்தின் சென்னை மற்றும் கோவை அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனிடையே நெஞ்சுவலி காரணமாக சந்திரபிரகாஷ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி  வளாகத்தில் மூன்று தளங்களில் அமைந்துள்ள கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் நேற்று இரவு 12 மணி வரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.  நேற்றைய தினம் இரண்டு தளங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், இன்று  மூன்றாவது தளத்தில் இன்றும் 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனையை துவங்கியுள்ளனர். அலுவலகங்கள் முன்பாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சோதனை இன்று மாலை வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: ADMK, Crime News, SP Velumani, Tender Scam