உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்பு பணியில் வட இந்திய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக வந்த மாணவர்கள் தெரிவித்த புகார் குறித்து வெளியுறவு துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்
கோவை விமான நிலையத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது , “ திமுக தலைமையிலான அரசு 9 மாதங்களாக சிறப்பாக, வெளிப்படையாக செயல்படுகின்றது. மேலும் 5 மாநில கருத்து கணிப்பு என்பது , சாப்பிடாமல் சாப்பாட்டை வர்ணிப்பது போல,கருத்துகணிப்பை வைத்து முடிவுக்கு வர முடியாது நாளைக்கு முடிவை பார்க்கலாம்.
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பதில் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 30 பேர் உக்ரைனில் படிக்கும் நிலையில் 13 பேர் மட்டுமே இது வரை ஊருக்கு வந்திருக்கின்றனர். உக்ரைனில் இருந்து மருத்துவ படிப்பினை பாதியில் விட்டுவிட்டு வந்திருக்கின்ற மாணவர்கள் மீண்டும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கின்றது. அவர்கள் இந்தியாவில் படிக்க வைக்க வாய்ப்பு இருக்கின்றதா என பார்க்க வேண்டும்.
Also Read : உக்ரைனில் படிக்க மாணவர்கள் பெற்ற வங்கி கடனை தள்ளுபடி செய்யவேண்டும் - சீமான் கோரிக்கை
இந்தியாவில் மாணவர்களை சேர்க்க இடம் இல்லை எனில் வேறு நாட்டில் படிக்க வைக்க முடியுமா என்பதையும் ஆராய வேண்டும். நாடு திரும்பியுள்ள மருத்துவ மாணவர்களின் கடனை ரத்து செய்யவேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும்.கோவை மாணவர் உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்து இருப்பது ஆபாயகரமானது. கோவை மாணவர் சேர்ந்து இருப்பதை போல, ஒரு இஸ்லாமிய மாணவர் வேறு நாட்டு ராணுவத்தில் சேர்ந்து இருந்தால் இந்நேரம் ஜிகாதி என்று சொல்லி இருப்பார்கள். உக்ரைன் ஒரு கிறிஸ்தவ வெள்ளைக்கார நாடு அவர்களுக்கு ஒரு பார்வை இவர்களுக்கு ஒரு பார்வை என பார்க்க கூடாது. மாணவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து போரிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
உக்ரைன் -ரஷ்யா போர் விவகாரத்தில் ரஷ்யாவின் வாதம் கேட்கப்படவில்லை. ரஷ்யா போர் தொடுக்க சில காரணங்கள் இருந்தது. நேட்டோ ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு வர அந்நாடு விரும்பவில்லை .உக்ரைன் தரப்பு செய்திகள் மட்டுமே வெளிவருகின்றது. ரஷ்யா தரப்பு செய்திகளை ஊடகங்களால் வெளியிடபட வில்லை என்றார்.
Also Read: 9 மாதத்தில் இத்தனை சாதனையா..! முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ஈவிகேஎஸ் இளங்கோவன்
சசிகலா விவகாரம் அந்த கட்சியின் விவகாரம். அதிமுகவின் வாக்கு வங்கி இப்பவும் அப்படியே இருக்கின்றது. தலைமை சரியான ஒருங்கிணைப்பில் இல்லாததால் அங்கு பிரச்னை இருக்கின்றது. இரட்டை தலைமை செழிப்பாக இருக்காது. உக்ரைன் மீட்பு பணியில் வட இந்திய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக வந்த மாணவர்களின் புகார் குறித்து வெளியுறவு துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பபடும் கடிதம் மூலமும் இது குறித்து கேட்ப்போம் என தெரிவித்தார்
இந்த மத்திய அரசுக்கு பொருளாதாரத்தை நடத்த திறமை கிடையாது லாபம் வரும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பது தவறானது. இரு குழுமங்களுக்கு மட்டுமே இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகிறது எனக் குற்றம்சாட்டினார்.காங்கிரஸ் கட்சி ஒரு சில இடங்களில் தேர்தலில் வெற்றி பெறாமல் போயிருக்கலாம், அதற்காக காங்கிரஸ் கட்சியில் தலைமை இல்லை, துணிச்சல் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.