• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சூயஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் - காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் வலியுறுத்தல்

சூயஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் - காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் வலியுறுத்தல்

மயூரா ஜெயக்குமார்

மயூரா ஜெயக்குமார்

கோயம்புத்தூர் மாநகராட்சி சூயஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    கோயம்புத்தூர் மாநகராட்சியில் தண்ணீர் விநியோகத்துக்கு சூயஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கோவை மாநகராட்சியில் 3,167 கோடி ரூபாய்க்கு 26 ஆண்டுகள் குடிமக்களின் ஜீவாதாரமாகப் பார்க்கப்படும் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு ஒப்பந்தம் மூலம் தாரை வார்க்கப்பட்டது. அதனால், பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக தெரியவருகிறது.

    குடிநீர் விநியோகம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அரசு சார்ந்த துறையின் மூலமாக நடத்தப்பட்டால்தான் அடித்தள மக்களுக்கு முழுமையாக சென்றடையும். அதைத் தவிர்த்து மக்களின் அடிப்படை ஜீவாதாரமாகிய தண்ணீர் விநியோகத்தை வணிகம் ஆக்கி தனியார் நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டால் பணக்காரர்களுக்கு மட்டுமே போய் சேருகின்றன அபாயமான சூழ்நிலை ஏற்படும். மேலும் தனியாருக்கு கொடுக்கப்படுகிற ஒப்பந்தம் அதிகப்பட்சமாக 10 ஆண்டுகளுக்கு மேல் இருப்பது நல்லதல்ல.

    கோவை மாநகராட்சி - சூயஸ் ஒப்பந்தம் 26 ஆண்டுகள் போடப்பட்டிருக்கிறது. இது ஒரு சந்ததியை கடக்கும் திட்டமாகும். இவ்வளவு ஆண்டு காலம் ஒரு அயல்நாட்டு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுப்பது மிகவும் ஆபத்தானது. அதுபோல பொது குழாய் இருக்கக் கூடாது. குடிநீர் தனியார் மயமாக்கப்பட்டால் எப்படி தனியார் செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தை குறித்த தேதியில் செலுத்தவில்லை என்றால் இணைப்பைத் துண்டிக்கிறார்களோ அதுபோல சூழ்நிலை காரணமாக ஏழை மக்கள் தண்ணீர் கட்டணம் சில தினங்கள் செலுத்த தாமதமாகும் பட்சத்தில் கூட தனியார் நிறுவனங்கள் இது அடிப்படை ஜீவாதாரம் என்பதை கருத்தில் கொள்ளாமல் இணைப்பைத் துண்டித்து ஏழை மக்களை பாதிக்கச் செய்யும் அபாயம் ஏற்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் எதிர்காலத்தில் குடிநீர் கட்டணத்தை தாங்களே உயர்த்திக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கி ஏழை மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துவார்கள். இதுபோன்ற பல பிரச்னைகள் சூயஸ நிறுவனத்தின் தண்ணீர் விநியோகத்தில் உள்ளதாலும் இத்திட்டத்தினால் பெரும் ஊழல் நடந்திருப்பதாக தகவல் வெளிவருவதாலும், கோவை மாநகராட்சி, அயல்நாட்டு சூயஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட பணிவன்புடன் வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: