• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதில் குழப்பம்!

விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதில் குழப்பம்!

Rape case

Rape case

கைதான பிளைட் லெப்டினன்ட் அமிதேஷ்க்கு 30 ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

  • Share this:
கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில், வரும் 30 ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அது வரை பிளைட் லெப்டினன்ட் அமிர்தேஷை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கோவை இந்திய விமான படை கல்லூரியில் பெண் விமான படை அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பிளைட் லெப்டினன்ட் அமிர்தேஷ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பிளைட் லெப்டினன்ட் அமிர்தேஷ் தன்னை கோவை காவல் துறையினர் கைது செய்தது தவறு எனவும் இந்திய  விமான படை நீதிமன்றம்தான் இதை விசாரிக்க வேண்டும் என கோவை  கூடுதல் மகளிர் நீதி மன்ற நீதிபதியிடம் கைதின் போது  அபிடவிட் தாக்கல் செய்தார்.

இந்நிலையில்  இந்த பாலியல் வன்புணர்வு வழக்கை யார் விசாரணை மேற்கொள்வது என்பது குறித்த விசாரணையானது கூடுதல் மகளிர் நீதிபன்ற  நீதிபதி  திலகேஸ்வரி முன்னிலையில்  நடைபெற்றது. நீதிமன்றத்தில்  பாதிக்கப்பட்ட பெண் விமான படை அதிகாரி, இந்திய விமான படை கல்லூரி அதிகாரிகள், கோவை மாநகர காவல் துறை மற்றும் கைது செய்யப்பட்ட பிளைட் லெப்டினன்ட் அமிதேஷ் ஆகியோரிடம் விசாரணையானது நடத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் விமான படை அதிகாரி இந்த வழக்கை கோவை  காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்திய விமானப்படை அதிகாரிகள் வழக்கை இந்திய விமான படை சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்க போவதாகவும் அமிர்தேஷை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள்  பாலியல் வன்புணர்வு வழக்கை பதிவு செய்து இருப்பதால் தாங்களே விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Also Read:  ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரம்

இதனிடையே விமான படை அதிகாரி அமிர்தேஷ் தனக்கு ஜாமின் வழங்க கோரி கோவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விமான படை அதிகாரி அமிர்தேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோவை மாநகர காவல் துறை  சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி திலகேஸ்வரி, வழக்கு விசாரணை தொடர்பான உத்தரவு  வரும் 30 ம் தேதிக்கு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.அது வரை விமான படை அதிகாரி அமிர்தேஷை நீதிமன்ற காவலில் உடுமலைப்பேட்டை சிறையில் அடைக்க உத்திரவிட்டார்.

Also Read:  கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் காஸ்ட்லி பைக்குகளை குறிவைத்து திருட்டு!

காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெற்ற விசாரணை காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: