Home /News /tamil-nadu /

வெள்ளிங்கிரி மலைக் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் வசூல் வேட்டை- பக்தர்கள் புகார்

வெள்ளிங்கிரி மலைக் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் வசூல் வேட்டை- பக்தர்கள் புகார்

வெள்ளிங்கிரி மலைக் கோயில்

வெள்ளிங்கிரி மலைக் கோயில்

Vellingiri hill temple : கோவை மாவட்டம், வெள்ளிங்கிரி மலைக் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் பணம் வசூலிப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    தென் கைலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு உள்ள கோவில் அடிவாரத்திலிருந்து செங்குத்தாக உள்ள ஆறாவது மலைகளை கடந்து, ஏழாவது மலையில் சுயம்புலிங்கமாக வெள்ளிங்கிரி ஆண்டவரை பக்தர்கள் தரிசிப்பது வழக்கம்.

    ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, சித்திரை 1 ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 4 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் மலை ஏற வனத்துறையினர் தடை விதித்திருந்தனர் இந்நிலையில் இரண்டு நாட்கள் மகாசிவராத்திரி வருவதால் ஏராளமான பக்தர்கள் வெள்ளிங்கிரி மலை ஏற வருகின்றனர். இதனையொட்டி அங்கு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு இன்னும் முறையாக அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனாலும், மலையேறும் பக்தர்களுக்கு அவர்களிடம் வனத்துறையினர் சார்பாக ரூபாய் 100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு ரசீது கொடுப்பது இல்லை இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வெள்ளிகிரிமலை வரும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    Must Read : வேண்டுதல் நிறைவேற பக்தர் தலையில் தீயிட்டு பொங்கல் வைக்கும் நிகழ்வு

    இந்நிலையில், கடந்த காலங்களில் பின்பற்றும் முறையே அமல்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரும்பாலோனோர் சிவபக்தர் என்பதால் அவர்களிடம் பணம் வசூலிப்பது வருத்தமளிக்கிறது என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர் : சுரேஷ், தொண்டாமுத்தூர், கோவை.
    Published by:Suresh V
    First published:

    Tags: Coimbatore, Forest Department, Temple

    அடுத்த செய்தி