ஏழை, எளிய, பட்டியல் இனத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிமுகம் செய்து வைக்க கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்கட்சியினர் பிரச்சினையை கிளப்பி அறிமுகம் செய்து வைக்க முடியாத நிலையை ஏற்படுத்தியதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நா தழுதழுக்க தெரிவித்தார்.
கோவையில் பா.ஜ.க சார்பில் மக்கள் ஆசி யாத்திரை இன்று துவங்கியது. இதில் கலந்து கொள்ள விமான நிலையம் வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து கோவை காமராஜபுரம் பகுதியில் மக்கள் ஆசி யாத்திரையை முன்னிட்டு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், குஷ்பு உட்பட பா.ஜ.கவின் முக்கிய நி்ர்வாகிகள் பங்கேற்றனர்.
Also read: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்: மக்கள் நீதி மய்யம்
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக இன்று முதல் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 3 நாட்கள் இந்த மக்கள் ஆசி யாத்திரை நடைபெறுகின்றது. காமராஜபுரம் பகுதியில் நடந்த கூட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜ.க தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், 75வது சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் இருக்கின்றோம். காங்கிரஸ், திமுக கட்சியில் தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருந்தனர். ஆனால், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை மத்திய அமைச்சராக ஆக்கியதில்லை.
அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த என்னை, எந்த கட்சியும் செய்ய துணியாத செயலாக மாநில தலைவராக்கியது பா.ஜ.க, எந்த சமூகத்தில் இருந்து அமைச்சரே வராமல் இருந்தார்களோ அந்த சமூகத்தை சேர்ந்த என்னை அமைச்சராக்கியது பா.ஜ.க.
பட்டியல் இன மக்கள் அமைச்சர்கள் 12 பேர், பழங்குடியின அமைச்சர்கள் 8 பேர், பிற்படுத்தபட்ட சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் 28 பேர் உள்ளனர்.
செருப்பு தைக்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான், என்னை மத்திய அமைச்சராக்கியது பா.ஜ.க என கூறிய அவர் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சியினர் எங்களை இரு அவைகளிலும் அறிமுகம் செய்து வைக்க விடவில்லை என நா தழுதழுக்க தெரிவித்தார்.
சமூக நீதியின் காவலன் நரேந்திர மோடி தான் என தெரிவித்த அவர், இந்தியா முழுவதும் 40 அமைச்சர்களும் மக்களை சந்தித்து ஆசீர்வாசதம் வாங்கும் நிகழ்வில் இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மக்கள் ஆசி யாத்திரை இந்தியா முழுவதும் நடைபெறுகின்றது எனவும், பட்டியல் இனத்தை சேர்ந்த என்னை, எந்த அவையிலும் உறுப்பினர் இல்லாத ஒருவரை அமைச்சராக நியமித்திருப்பது இதுவே முதல் முறை என நினைக்கின்றேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சாதாரண குடும்பத்தில் இருந்த வந்த எங்களை, பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைப்பார்கள் என ஆர்வத்துடன் இருந்தோம். ஆனால், எங்களை அறிமுகம் செய்து வைக்க கூடாது என கெட்ட எண்ணத்தில் அவையில் காங்கிரஸ், திமுக, காங்கிரஸ் உட்பட எதிர்கட்சியினர் பிரச்சினையை கிளப்பி அறிமுகம் செய்து வைக்க முடியாத நிலையை ஏற்படுத்தினர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த சோதனையை அவர் சட்டப்படி எதிர்கொள்வார். திமுகவின் 100நாள் ஆட்சியில் சொன்னதை செய்யவில்லை, குடும்ப பெண்களுக்கு 1000 ரூபாய் கொடுப்பதாக சொன்ன அறிவிப்பை அவர்கள் நிறைவேற்றவில்லை, கல்விக் கடன் குறித்த அறிவிப்பு இல்லை, சாத்தியம் இல்லாதவற்றை சொல்லி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக அரசு இருக்கின்றது என்று அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.