இன்னோவா காரை பார்வையிட வாருங்கள்.. கோவை தொண்டர்களுக்கு பாஜக தலைமை அழைப்பு

இன்னோவா காரை பார்வையிட வாருங்கள்.. கோவை தொண்டர்களுக்கு பாஜக தலைமை அறிவிப்பு

கோவை மாவட்டத்திற்கு கட்சித்தலைமை பரிசாக வழங்கிய இன்னோவா காரை பார்வையிட வருமாறு கோவை மாவட்ட தொண்டர்களுக்கு அக்கட்சி தலைமை சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த 4 தொகுதிகளில் வெற்றிக்காக உழைத்த மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு அளிக்கப்படும் என அக்கட்சி தலைமை தெரிவித்திருந்தது.

  Also read: செப்டம்பர் 16-ல் டிடிவி தினகரன் மகள் திருமணம்... திருவண்ணாமலையில் தடல்புடல் ஏற்பாடு..

  இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை, ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பாஜக தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கார்களை வழங்கினார்.

  இந்நிலையில் இன்று மாலை கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் கட்சி தலைமையால் பரிசாக பெறப்பட்ட இன்னோவா கார் கட்சியினரின் பார்வைக்கு வைக்கப்படுகிறது எனவும் தொண்டர்கள் அனைவரும் காரை பார்வையிட வருமாறு பாஜக மாவட்டத் தலைமை சமூக வலைதளங்கள் மூலம் கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Esakki Raja
  First published: